வீடு / சமையல் குறிப்பு / சிகப்பு சோயா பீன்ஸ் குருமா, தேங்காய் பால் பிரியாணி, முட்டை வறுவல்

Photo of Red soya beans kurma,coconut milk briyani,Egg roast by kowsalya sanjeev at BetterButter
1319
2
0.0(0)
0

சிகப்பு சோயா பீன்ஸ் குருமா, தேங்காய் பால் பிரியாணி, முட்டை வறுவல்

Dec-11-2018
kowsalya sanjeev
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
50 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சிகப்பு சோயா பீன்ஸ் குருமா, தேங்காய் பால் பிரியாணி, முட்டை வறுவல் செய்முறை பற்றி

தேங்காய் பாலில் செய்த சாதத்துடன் குருமா மற்றும் முட்டை வறுவல்

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • கிறிஸ்துமஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தேங்காய் பால் அரை முறி தேங்காயில் எடுத்தது
  2. அரிசி
  3. இஞ்சி ஒரு விரல் அளவு
  4. வெண்ணெய் சிறிது
  5. எண்ணெய்
  6. பூண்டு 5 பல்
  7. கிராம்பு 4
  8. சோம்பு ஒரு ஸ்பூன்
  9. பட்டை 2
  10. அண்ணாச்சி பூ 1
  11. ஏலக்காய் 2
  12. பிரிஞ்சி இலை 1
  13. பெரிய வெங்காயம் 2
  14. பச்சை மிளகாய் 2
  15. தக்காளி 2
  16. உப்பு தேவைக்கேற்ப
  17. மல்லி இலை சிறிது
  18. சிகப்பு சோயாபீன்ஸ் 150 கிராம்
  19. சீரகம் ஒரு ஸ்பூன்
  20. தேங்காய் சிறிது
  21. கரிமசால் பொடி ஒரு ஸ்பூன்
  22. சின்ன வெங்காயம் 5
  23. முட்டை 2
  24. மிளகாய் பொடி ஒரு ஸ்பூன்
  25. தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. சிகப்பு சோயாபீன்ஸ் குருமா ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,உளுத்தம்பருப்பு தாளித்து சிறிய வெங்காயம் சேர்க்கவும்.
  2. பின் மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,கரிமசால் பொடி,உப்பு, தக்காளி சேர்த்து வதக்கவும்.
  3. பின் சோயாபீன்ஸ் சேர்க்கவும்.
  4. தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும்
  5. தேங்காய் சீரகம் ஒரு பல் பூண்டு சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து கொள்ளவும். அதை சோயாபீன்ஸ் வெந்ததும் சேர்க்கவும்.
  6. சிகப்பு சோயா பீன்ஸ் குருமா தயார்.
  7. தேங்காய் பால் பிரியாணி ஒரு பாத்திரத்தில் வெண்ணெய்,எண்ணெய் ஊற்றி அதில் பிரிஞ்சி இலை,சோம்பு, பட்டை,கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வதக்கவும்.
  8. பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
  9. தக்காளி, மல்லி இலை போட்டு வதக்கவும்.
  10. உப்பு,அரிசி மற்றும் தேங்காய் பால் சேர்க்கவும். குக்கரில் 5 விசில் வந்ததும் இறக்கவும்.
  11. தேங்காய் பால் பிரியாணி தயார்.
  12. முட்டை வறுவல் கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அவித்த முட்டை சேர்த்து வதக்கவும்.
  13. பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.
  14. அடுப்பை அணைத்து கொண்டு மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  15. எண்ணெயில் பொரித்த முட்டையை சேர்த்து வதக்கவும்.
  16. முட்டை வறுவல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்