வீடு / சமையல் குறிப்பு / வெஜ் பிரியாணி

Photo of Veg biryani by Wahida Abdul Hameed at BetterButter
424
1
0.0(0)
0

வெஜ் பிரியாணி

Dec-11-2018
Wahida Abdul Hameed
8 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வெஜ் பிரியாணி செய்முறை பற்றி

என் அம்மாவின் கை வண்ணத்தில் எனக்கு மிகவும் பிடித்தவெஜ் பிரியாணி.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வெங்காயம்-3
  2. தக்காளி-2
  3. விருப்பத்திற்கு ஏற்ப காய்கறிகள் ¼ கிலோ
  4. புதினா ஒரு கையளவு
  5. கொத்தமல்லி இலை ஒரு கையளவு
  6. பச்சை மிளகாய்-1
  7. எலுமிச்சை பாதி
  8. மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்
  9. கரம் மசாலா ஒரு டீஸ்பூன்
  10. இஞ்சி பூண்டு விழுது ஒரு டேபிள்ஸ்பூன்
  11. எண்ணெய் நெய் தேவையான அளவு
  12. பட்டை ஒரு பெரிய துண்டு
  13. கிராம்பு-3
  14. ஏலக்காய் 4
  15. சாவித்திரி 1
  16. அன்னாசி பூ 1
  17. பிரியாணி இலை
  18. தயிர் ஒரு டேபிள்ஸ்பூன்
  19. பாஸ்மதி அரிசி 2 கப்
  20. தண்ணீர் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பாஸ்மதி அரிசியை 30 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும். குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, ஜாவித்திரி, பிரியாணி இலை போட்டு தாளிக்கவும்.
  2. நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து விருப்பமான காய்கறிகளை சேர்க்கவும்.
  3. இதோடு தக்காளி சேர்த்து தக்காளி நன்கு மசியும் வரை கிளறி மிளகாய் தூள், கரம் மசாலா , கையளவு புதினா இலை, கையளவு கொத்தமல்லியிலை மற்றும் தயிர் சேர்த்து நன்றாக கிளறவும்.
  4. இதனுடன் 1 கப் பாசுமதி அரிசிக்கு 1 ¼ கப் தண்ணி என்ற வீதத்தில் தேவையான தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து பாதி எலுமிச்சம்பழம் பிழியவும்.
  5. தண்ணீர் நன்கு கொதித்ததும் ஊறவைத்த அரிசியை போடவும். குக்கரை மூடி 10 நிமிடம் வேக விடவும்.
  6. சுவையான வெஜிடபிள் பிரியாணி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்