வீடு / சமையல் குறிப்பு / அகத்தி கீரை மசால் வறுவல்

Photo of Sesbania Grandiflora Masala fry by Karuna pooja at BetterButter
1259
1
0.0(0)
0

அகத்தி கீரை மசால் வறுவல்

Dec-11-2018
Karuna pooja
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அகத்தி கீரை மசால் வறுவல் செய்முறை பற்றி

நம் அகத்தினை குளிரவைத்து ,மாமிசத்திற்கு இணையான புறதத்தினை நமக்கு வழங்கும் வரம் இந்த அகதி. ஆனால் இயந்திர உலகுக்கு மாறிய நாம் இதனை கால்நடைகளுக்கு வழங்குகிறோம் . அம்மாகைவண்ணாம் போட்டியின் மூலம் ,நான் கற்றதை உங்களுக்கு பதிவிடுவதில் மழில்கிறேன்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ஷாலோ ஃபிரை
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஒரு கட்டு அகத்திக் கீரை
  2. கொத்தமல்லி விதை 2 டீஸ்பூன்
  3. கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன்
  4. மிளகு அரை டீஸ்பூன்
  5. வரமிளகாய்-2
  6. சீரகம் அரை டீஸ்பூன்
  7. தேங்காய் எண்ணெய் ஒரு டீஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு
  9. சின்ன வெங்காயம் 50 கிராம்
  10. தேங்காய் ஒரு சிறிய துண்டு

வழிமுறைகள்

  1. அகத்திக் கீரையை சுத்தம் செய்து நறுக்கி வைக்கவும்
  2. ஒரு கடாயில் மல்லி விதை சீரகம் சேர்த்த
  3. மிளகு சேர்க்கவும்
  4. வரமிளகாய் சேர்க்கவும்
  5. இவற்றை மிதமான தீயில் வைத்து வறுக்கவும்
  6. பின்னர் ஆறவிடவும்
  7. அதே கடாயில் அளவான(1-4 சிரிய டம்ளர்) தண்ணீரை கொதிக்க விடவும்
  8. தண்ணீர் நன்கு கொதித்த பின் கீரையை சேர்த்து வேகவிடவும்.
  9. உப்பு தேவையான அளவு சேர்க்கவும்
  10. தேங்காய் எண்ணெய் சிறிது சேர்த்து வேகவிடவும்
  11. மசாலாவை கொரகொரப்பாக திரிக்கவும்
  12. வெங்காயத்தை அம்மியில் வைத்து தட்டவும்.
  13. தேங்காயை அம்மியில்​ வைத்து தட்டவும்.
  14. 5 நிமிடத்தில் கீரை வெந்ததும் மசாலாவை சேர்த்து வேகவிடவும்.
  15. சின்ன வெங்காயம் சேர்க்கவும்
  16. இவை அனைத்தும் நன்கு வேந்ததும்
  17. தேங்காய் சேர்த்து கலந்து இறக்கவும்.
  18. சுவையான அகத்தி கீரை மாசாலா வறுவல் ரெடி
  19. இதனை சாதத்துடன் கலந்து கலவை சாதம்போலவும் சுவைக்கலாம்....

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்