வீடு / சமையல் குறிப்பு / முளைக்கட்டிய கொண்டைக்கடலை சுண்டல்

Photo of Sprouted chickpea fry by Fathima Beevi at BetterButter
343
0
0.0(0)
0

முளைக்கட்டிய கொண்டைக்கடலை சுண்டல்

Dec-11-2018
Fathima Beevi
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

முளைக்கட்டிய கொண்டைக்கடலை சுண்டல் செய்முறை பற்றி

முளைக்கட்டிய கொண்டைக்கடலை சுண்டல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. முளைக்கட்டிய கொண்டைக்கடலை- 1 கப்
  2. கருலேப்பில்லை- ஒரு கொத்து
  3. தேங்காய் துருவல்- 1 டேபிள் ஸ்பூன்  
  4. காய்ந்த மிளகாய் வற்றல்-3
  5. வெள்ளை எள்ளு - 1 டீஸ்பூன்
  6. சீரகம்-1 டீ ஸ்பூன்
  7. மல்லி-2 டீ ஸ்பூன்
  8. பெருங்காயத்தூள்-ஒரு சிட்டிகை
  9. உப்பு- தேவையான அளவு
  10. தேங்காய் எண்ணெய்- 1 டேபிள் ஸ்பூன்
  11. கடுகு- 1/4 டீ ஸ்பூன்
  12. சீரகம்-1/4 டீ ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கொண்டைக்கடலையை தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
  2. பின்பு ஒரு ஈரமான துணியில் ஊறிய கொண்டைக்கடலையை பொதிந்து முளைகட்டும் வரை  வைக்கவும்
  3. நன்றாக முளைக்கட்டிய பின் இட்லி சட்டியில்  வைத்து வேக வைக்கவும்.
  4. தேங்காய் துருவல், வெள்ளை எள்ளு, சீரகம், மல்லி, மிளகாய் வற்றலை நன்றாக வறுத்து சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
  5. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு, சீரகம் பொடித்து கொள்ளவும்.
  6. பின்பு கருலேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
  7. நன்கு வதங்கியதும், வேக வைத்த கொண்டைக்கடலையை  சேர்த்து கிளறவும்.
  8. இதனுடன் தேவையான அளவு உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கிளறவும்.
  9. பின்பு அரைத்த மசாலாவை சேர்த்து நன்கு வதக்கவும்.
  10. ஒரு 10 நிமிடங்கள் மிதமான சூட்டில் கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்