BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / சென்னா மசாலா

Photo of Chana masala by hajirasheed haroon at BetterButter
0
0
0(0)
0

சென்னா மசாலா

Dec-11-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சென்னா மசாலா செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • పిల్లలకు నచ్చే వంటలు
  • తమిళనాడు
  • సైడ్ డిషెస్
  • తక్కువ క్యాలరీలు

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வெள்ளை சுண்டல் 100 கிராம்
  2. தக்காளி-2
  3. வெங்காயம் ஐந்து
  4. தேவையான அளவு உப்பு
  5. இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
  6. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  7. மிளகாய் தூள் அரை ஸ்பூன்
  8. எண்ணெய் தேவையான அளவு
  9. சென்னா மசாலா ரெண்டு ஸ்பூன்
  10. தாளிக்க பட்டை ஏலக்காய் கிராம்பு தலா ஒன்று

வழிமுறைகள்

  1. சுண்டல் பயிறு முதல் நாள் இரவே ஊற வைத்து கொள்ளவும் குக்கரில் தண்ணீர் சேர்த்து 2 விசில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. மிக்ஸியில் 2 வெங்காயம் 2 தக்காளி வேக வைத்த சென்னா சுண்டல் பயிறு ரெண்டு ஸ்பூன் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்
  3. குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை ஏலக்காய் கிராம்பு சேர்த்து பொரியவிடவும் பிறகு மூன்று வெங்காயத்தை பொடியாக நறுக்கி பொன்னிறமாக வதக்கவும் அதனுடன் அரைத்த வெங்காய தக்காளி விழுது உப்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறி விடவும்
  4. பிறகு மீதி வேகவைத்துள்ள சுண்டல் பயர் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி மீண்டும் 2 விசில் வேகவிடவும்
  5. இரண்டு விசில் வந்தவுடன் கடைசியாக சென்னா மசாலா பவுடர் சேர்த்து கிளறி பரிமாறலாம்
  6. சுவையான சென்னா மசாலா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்