வீடு / சமையல் குறிப்பு / ஹயக்ரீவா பிரசாதம் (நெய்வேத்யம்)

Photo of Hayagreeva prasadam (neivedyam) by Krishnasamy Vidya Valli at BetterButter
707
0
0.0(0)
0

ஹயக்ரீவா பிரசாதம் (நெய்வேத்யம்)

Dec-13-2018
Krishnasamy Vidya Valli
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஹயக்ரீவா பிரசாதம் (நெய்வேத்யம்) செய்முறை பற்றி

கல்வியின் கடவுளான ஹயக்ரீவருக்கு படைக்கப்படும் பிரசாதம் அல்லது நெய்வேத்தியம் இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • பிரெஷர் குக்
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கடலைப்பருப்பு கால் கப்
  2. வெல்லம் கால் கப்
  3. தேங்காய் துருவல் 1/8 கப்+ 1 மேஜைக்கரண்டி
  4. நெய் 2 மேசைக்கரண்டி
  5. ஏலப்பொடி 2 சிட்டிகை
  6. முந்திரி கிஸ்மிஸ் பாதாம் தலா 4 முதல் 6

வழிமுறைகள்

  1. கடலை பருப்பை தண்ணீர் விட்டு 15 நிமிடங்கள் ஊற வைத்து குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. கடாயில் ஒரு மேஜைக்கரண்டி நெய் விட்டு பாதாம் முந்திரி கிஸ்மிஸ் வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்
  3. கடாயில் தண்ணீர் விட்டு வெல்லம் சேர்த்துக் கரைய விடவும் விருப்பப்பட்டால் வடிகட்டிக் கொள்ளவும்
  4. பாகு பதம் தேவையில்லை வெல்ல கரைசல் சிறிது கெட்டியானதும் வேக வைத்த கடலைப்பருப்பு சேர்த்து கிளறவும்
  5. தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும்
  6. மீதமுள்ள நெய் விட்டு கிளறி ஏலப்பொடி தூவி இறக்கவும்
  7. ஏற்கனவே வறுத்த பாதாம் முந்திரி கிஸ்மிஸ் சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்