பச்சைப்பயிறு கருணைக்கிழங்கு மசியல் | Pacha payaru karunai kizhangu masiyal in Tamil

எழுதியவர் Krishnasamy Vidya Valli  |  13th Dec 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Pacha payaru karunai kizhangu masiyal by Krishnasamy Vidya Valli at BetterButter
பச்சைப்பயிறு கருணைக்கிழங்கு மசியல்Krishnasamy Vidya Valli
  • ஆயத்த நேரம்

    30

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    35

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

0

0

பச்சைப்பயிறு கருணைக்கிழங்கு மசியல் recipe

பச்சைப்பயிறு கருணைக்கிழங்கு மசியல் தேவையான பொருட்கள் ( Ingredients to make Pacha payaru karunai kizhangu masiyal in Tamil )

  • பச்சை பயிறு கால் கப்
  • கருணைக்கிழங்கு 2
  • உப்பு அரை தேக்கரண்டி
  • மஞ்சள் பொடி 2 சிட்டிகை
  • எலுமிச்சை சாறு ஒரு தேக்கரண்டி
  • கொத்தமல்லி இலை சிறிது
  • தாளிக்க
  • எண்ணெய் ஒரு தேக்கரண்டி
  • கடுகு உளுத்தம்பருப்பு தலா அரை தேக்கரண்டி
  • கடலைப்பருப்பு ஒரு தேக்கரண்டி
  • பச்சை மிளகாய் மற்றும் மிளகாய் வத்தல் தலா ஒன்று அல்லது இரண்டு
  • பெருங்காயம் கால் தேக்கரண்டி
  • கருவேப்பிலை இரண்டு ஆர்க்கு

பச்சைப்பயிறு கருணைக்கிழங்கு மசியல் செய்வது எப்படி | How to make Pacha payaru karunai kizhangu masiyal in Tamil

  1. பச்சைப்பயிறை அரை மணி நேரம் ஊற வைத்து குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. கருணைக் கிழங்கை வேக வைத்து தோல் உரித்துக் கொள்ளவும்
  3. கருணைக் கிழங்கை மசித்து உப்பு மஞ்சள் பொடி சிறிது தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்
  4. வேகவைத்த பச்சைப் பயிறு சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்
  5. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றைத் தாளித்து சேர்க்கவும்
  6. எலுமிச்சை சாறு கலந்து கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்

எனது டிப்:

எலுமிச்சை சாறுக்கு பதில் புளிகூட சேர்க்கலாம்

Reviews for Pacha payaru karunai kizhangu masiyal in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.