வீடு / சமையல் குறிப்பு / பச்சைப்பயிறு கருணைக்கிழங்கு மசியல்

Photo of Pacha payaru karunai kizhangu masiyal by Krishnasamy Vidya Valli at BetterButter
681
0
0.0(0)
0

பச்சைப்பயிறு கருணைக்கிழங்கு மசியல்

Dec-13-2018
Krishnasamy Vidya Valli
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பச்சைப்பயிறு கருணைக்கிழங்கு மசியல் செய்முறை பற்றி

பச்சைப்பயிறு உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது .அதோடு கருணைக்கிழங்கு சேர்த்து செய்யப்படும் மசியல் இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • ஸ்டிர் ஃபிரை
  • பிரெஷர் குக்
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பச்சை பயிறு கால் கப்
  2. கருணைக்கிழங்கு 2
  3. உப்பு அரை தேக்கரண்டி
  4. மஞ்சள் பொடி 2 சிட்டிகை
  5. எலுமிச்சை சாறு ஒரு தேக்கரண்டி
  6. கொத்தமல்லி இலை சிறிது
  7. தாளிக்க
  8. எண்ணெய் ஒரு தேக்கரண்டி
  9. கடுகு உளுத்தம்பருப்பு தலா அரை தேக்கரண்டி
  10. கடலைப்பருப்பு ஒரு தேக்கரண்டி
  11. பச்சை மிளகாய் மற்றும் மிளகாய் வத்தல் தலா ஒன்று அல்லது இரண்டு
  12. பெருங்காயம் கால் தேக்கரண்டி
  13. கருவேப்பிலை இரண்டு ஆர்க்கு

வழிமுறைகள்

  1. பச்சைப்பயிறை அரை மணி நேரம் ஊற வைத்து குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. கருணைக் கிழங்கை வேக வைத்து தோல் உரித்துக் கொள்ளவும்
  3. கருணைக் கிழங்கை மசித்து உப்பு மஞ்சள் பொடி சிறிது தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்
  4. வேகவைத்த பச்சைப் பயிறு சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்
  5. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றைத் தாளித்து சேர்க்கவும்
  6. எலுமிச்சை சாறு கலந்து கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்