வீடு / சமையல் குறிப்பு / பருப்பு உருண்டை குழம்பு

Photo of Lentils ball curry by Rabia Hamnah at BetterButter
305
1
0.0(0)
0

பருப்பு உருண்டை குழம்பு

Dec-13-2018
Rabia Hamnah
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பருப்பு உருண்டை குழம்பு செய்முறை பற்றி

சுவையான பருப்பு உருண்டை குழம்பு சிறுவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடலைப் பருப்பு 150 கிராம்
  2. சின்ன வெங்காயம் 25 பொடியாக நறுக்கியது
  3. கறிவேப்பிலை இரண்டு கொத்து
  4. சோம்பு ஒரு ஸ்பூன்
  5. வத்தல் 2
  6. உப்பு தேவைக்கு
  7. தக்காளி 2 பொடியாக நறுக்கியது
  8. எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்
  9. மஞ்சள் தூள் அரை ஸ்பூன்
  10. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  11. குழம்பு மசாலா பொடி 2 ஸ்பூன்
  12. தேங்காய் பால் அரை கப்
  13. கொத்தமல்லி இலை நறுக்கியது
  14. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  15. கடுகு ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கடலைப்பருப்பை தண்ணீருடன் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்
  2. ஊரிய கடலைப் பருப்பின் தண்ணீரை வடித்து மிக்ஸி ஜாரில் சேர்க்கவும்
  3. பருப்புடன் சோம்பு ,வத்தல் ,உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்
  4. பின்பு அரைத்த கலவையுடன் பத்து சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்க்கவும் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை சேர்க்கவும்
  5. பின்பு சிறு சிறு உருண்டைகளாக பிடித்து ஆவியில் 5 நிமிடம் வேக வைக்கவும்
  6. ஒரு பாத்திரத்தை காயவைத்து எண்ணெய் சேர்த்து காய விடவும்
  7. எண்ணெய் காய்ந்ததும் ஒரு ஸ்பூன் கடுகு சிறிது கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்
  8. நறுக்கிய 15 சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்
  9. வெங்காயம் பாதியளவு வதங்கியதும் ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  10. பின்பு பொடியாக நறுக்கிய 2 தக்காளியை சேர்த்து மசிய வேக விடவும்
  11. பின்பு அரை ஸ்பூன் மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் மிளகாய்த் தூள் 2 ஸ்பூன் மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும்
  12. தேவைக்கு உப்பு சேர்த்து வதங்க விடவும்
  13. அரை கப் தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போக வேகவிடவும்
  14. பின்பு அரை கப் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும்
  15. குழம்பு நன்றாக கொதிக்கும் பொழுது அவித்து எடுத்த பருப்பு உருண்டையை சேர்த்து கொஞ்சம் மல்லி இலை சேர்த்து 15 நிமிடம் குறைந்த தணலில் வேக விடவும்
  16. நன்கு எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை அணைத்து விடவும் சூடான சாதத்துடன் பரிமாற சுவையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்