வீடு / சமையல் குறிப்பு / வெள்ளை கொண்டைக்கடலை சாலட்

Photo of chickpeas salad by Wahida Abdul Hameed at BetterButter
532
0
0.0(0)
0

வெள்ளை கொண்டைக்கடலை சாலட்

Dec-13-2018
Wahida Abdul Hameed
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெள்ளை கொண்டைக்கடலை சாலட் செய்முறை பற்றி

ஆரோக்கியமான மற்றும் சுவையான மிக எளிதில் செய்யக்கூடிய சாலட்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • இத்தாலிய
  • பிரெஷர் குக்
  • ஸாலட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெள்ளை கொண்டைக்கடலையை வேக வைத்தது 1 கப்
  2. வெள்ளரிக்காய் 1 கப் பொடியாக நறுக்கியது
  3. வெங்காயம் 1 கப் பொடியாக நறுக்கியது
  4. தக்காளி 1 கப் பொடியாக நறுக்கியது
  5. மூவர்ண குடமிளகாய் பொடியாக நறுக்கியது 1 கப்
  6. எலுமிச்சை சாறு 1 டேபிள்ஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. இடித்த மிளகு அல்லது மிளகுத்தூள் சிறிதளவு
  9. பூண்டு 6 பல் பொடியாக நறுக்கியது
  10. இட்டாலியன் ஹெர்ப்ஸ் சிறிதளவு

வழிமுறைகள்

  1. குறைந்தது எட்டு மணி நேரம் கொண்டக்கடலையை ஊற வைக்க வேண்டும். அதன் பின் கொண்டைக்கடலையுடன் சிறிதளவு உப்பு சேர்த்து குக்கரில் 3 விசில் விட்டு வேக வைத்து தனியே எடுத்து வைக்கவும்.
  2. வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காய், குடமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  3. ஒரு வாயகன்ற கிண்ணத்தில் வேகவைத்த கொண்டைக்கடலை, வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காய், குடமிளகாய் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணவும்.
  4. ஒரு சிறிய கிண்ணத்தில் எலுமிச்சை சாறு, பொடியாக நறுக்கிய பூண்டு, மிளகுத்தூள், இத்தாலியன் ஹேர்ப்ஸ், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
  5. கொண்டக்கடலை கலவையுடன். எலுமிச்சை சாறு, பூண்டு, மிளகு தூள், இட்டாலியன் ஹெர்ப்ஸ், உப்புக் சேர்த்த கலவையை ஊற்றி நன்றாக கலந்து பரிமாறவும்.
  6. சுவையான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த கொண்டக்கடலை/ சிக்பீஸ். சாலட். தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்