கதம்ப வடை | Protein Rich Vada in Tamil

எழுதியவர் Juvaireya R  |  14th Dec 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Protein Rich Vada by Juvaireya R at BetterButter
கதம்ப வடைJuvaireya R
 • ஆயத்த நேரம்

  2

  மணிநேரம்
 • சமைக்கும் நேரம்

  5

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  10

  மக்கள்

0

0

கதம்ப வடை recipe

கதம்ப வடை தேவையான பொருட்கள் ( Ingredients to make Protein Rich Vada in Tamil )

 • கருப்பு சுண்டல், வெள்ளை சுண்டல் - 1/4 கப்
 • பச்சை பயிறு - 1/4 கப்
 • பச்சை பட்டாணி - 1/3 கப்
 • தட்டைப்பயறு- 1/4 கப்
 • நறுக்கிய வெங்காயம் - 2
 • இஞ்சி -பூண்டு விழுது -1 தேக்கரண்டி
 • கரம் மசாலா 1/4 தேக்கரண்டி
 • 3- 4 பச்சை மிளகாய்
 • 1தேக்கரண்டி - சோம்பு
 • தேவையான அளவு உப்பு
 • சிறிது கொதௌதுமல்லி, புதினா,கறிவேப்பிலை
 • பொரிக்க தேவையான அளவு எண்ணெய்

கதம்ப வடை செய்வது எப்படி | How to make Protein Rich Vada in Tamil

 1. 5 வகை பயிர்களையும் நன்றாக சுத்தம் செய்து தண்ணீரில் 6-8 மணிநேரம் ஊறவைக்கவும்.
 2. பின் மின்கலவையில் சோம்பு,பச்சைமிளகாய்,இஞ்சி -பூண்டு விழுது,கரம் மசலா சேர்த்து ஓரிரண்டாக அரைக்கவும்
 3. பின் ஊற வைத்த பயிர்களை தண்ணீரை வடித்து அதே மின் கலவையில் போட்டு உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்
 4. இரு பகுதியாக பிரித்தும் அரைத்துக் கொள்ளலாம்.
 5. பின் அரைத்தற்றை ஒரு பாத்திரத்திற்க்கு மாற்றவும்
 6. அதில் நறுக்கிய வெங்காயம், புதினா கொத்துமல்லி இலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
 7. கடாயில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சூடேற்றவும்.
 8. எண்ணெய் காய்ந்தததும் வடைகளைவிருப்பம் போல தட்டி போடவும்.
 9. மிதமான தீயில் இருபுமுமம் நன்றாக பொன்னிறத்தில் வேந்ததும் தட்டிற்க்கு மாற்றவும்.
 10. சூடான சுவையான புரதசத்து ,நார் சத்து நிறைந்த கதம்ப வடை தயார்.

எனது டிப்:

பொரிக்கும் போது வடை உதிர்ந்தால் சிறிது அரிசிமாவு சேர்த்து பொரித்துக்கொள்ளவும்

Reviews for Protein Rich Vada in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.