வீடு / சமையல் குறிப்பு / முளைகட்டிய கொள்ளு குருமா

Photo of Sprouted horsegram kuruma by kamala shankari at BetterButter
113
0
0.0(0)
0

முளைகட்டிய கொள்ளு குருமா

Dec-16-2018
kamala shankari
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முளைகட்டிய கொள்ளு குருமா செய்முறை பற்றி

சத்துமிக்க சுவையான ருசியான வித்தியாசமான குருமா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • ஸ்டீமிங்
  • சைட் டிஷ்கள்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கொள்ளு ஒரு கப்
  2. தக்காளி ஒன்று
  3. உருளைக்கிழங்கு ஒன்று
  4. நறுக்கிய வெங்காயம் ஒரு கப்
  5. உப்பு தேவையான அளவு
  6. தண்ணீர் தேவையான அளவு
  7. மஞ்சள் தூள் ஒரு தேக்கரண்டி
  8. தேங்காய் அரை கப்
  9. மல்லி இலை சிறிது
  10. பூண்டு 5
  11. மிளகாய் வற்றல் 4
  12. கிராம்பு-2
  13. இஞ்சி ஒரு துண்டு
  14. பச்சரிசி 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. கொள்ளை முதல் நாள் ஊற வைத்து தண்ணீர் வடித்து முளைகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்
  2. வெங்காயம் தக்காளி உருளைக்கிழங்கு நறுக்கிக் கொள்ளவும்
  3. அரிசி மிளகாய்வற்றல் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்
  4. அரிசி தேங்காய் வெங்காயம் மல்லி இலை மிளகாய் வற்றல் இஞ்சி பூண்டு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்
  5. குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை பொடியாக நறுக்கிய வெங்காயம் உருளைக்கிழங்கு வதக்கவும்
  6. முளைக்கட்டிய கொள்ளு அரைத்த மசாலா தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்த்து குக்கரில் 2 விசில் வைத்து எடுக்கவும்
  7. சூடாக பரிமாறவும் சாதத்திற்கு ஏற்றது

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்