வீடு / சமையல் குறிப்பு / கதம்ப கல்யாண சாம்பார்

Photo of Mixed Vegetable Kalyana Sambar by Sowmya Sundar at BetterButter
412
0
0.0(0)
0

கதம்ப கல்யாண சாம்பார்

Dec-18-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கதம்ப கல்யாண சாம்பார் செய்முறை பற்றி

கல்யாணத்தின் போது பரிமாறப்படும் கலவை காய்கறி சேர்த்த அரைத்து விட்ட சாம்பார்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • பாய்ளிங்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. துவரம் பருப்பு 1/2 கப்
  2. கலவை காய்கறிகள் 1/2 கப்(மஞ்சள் பூசணி,அவரைக்காய், தக்காளி,குடைமிளகாய்)
  3. புளி எலுமிச்சை அளவு
  4. உப்பு தேவையான அளவு
  5. மஞ்சள் பொடி 1/2 டீஸ்பூன்+ 1/4 டீஸ்பூன்
  6. பெருங்காயம் 1/2 டீஸ்பூன்
  7. நல்லெண்ணெய் 1 டீஸ்பூன்
  8. கடுகு, வெந்தயம் தலா 1/2 டீஸ்பூன்
  9. கறிவேப்பிலை, மல்லி சிறிதளவு
  10. வறுத்து அரைக்க
  11. கடலைபருப்பு 1 டேபிள் ஸ்பூன்
  12. உளுத்தம் பருப்பு 1 டீஸ்பூன்
  13. கொத்தமல்லி விதை 1 டேபிள் ஸ்பூன்
  14. மிளகாய் வற்றல் 8
  15. தேங்காய் துருவல் 1/4 கப்

வழிமுறைகள்

  1. குக்கரில் துவரம்பருப்பை தண்ணீர் விட்டு மஞ்சள் பொடி சேர்த்து வேக வைத்து கொள்ளவும்
  2. புளி கரைசலில் மஞ்சள் பொடி, காய்கறிகள் , உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்
  3. வறுக்க கொடுத்துள்ள பொருட்களை கால் டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுத்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்
  4. காய் வெந்ததும் அரைத்த விழுது மற்றும் வெந்த பருப்பை சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்
  5. நல்லெண்ணெயில் கடுகு, வெந்தயம் ,கறிவேப்பிலை, மல்லி சேர்த்து தாளித்து சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்