வீடு / சமையல் குறிப்பு / ராஜ்மா மசாலா

Photo of Rajma masala by Asiya Omar at BetterButter
0
0
0(0)
0

ராஜ்மா மசாலா

Dec-18-2018
Asiya Omar
720 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ராஜ்மா மசாலா செய்முறை பற்றி

சத்தான சுவையான சமையல்,வட இந்திய பாணியில் ராஜ்மா சாவல்,சப்பாத்தி என்று பரிமாறினால் யார் தான் வேண்டாம் என்பார்கள்.

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • మీడియం/మధ్యస్థ
  • సైడ్ డిషెస్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ராஜ்மா / கிட்னி பீன்ஸ் - அரை கப்
  2. பட்டர் - 2 மேஜைக்கரண்டி
  3. சீரகம் -1/2 தேக்கரண்டி
  4. பச்சை மிளகாய் -1
  5. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி குவியலாய்
  6. நறுக்கிய பெரிய வெங்காயம் -100 கிராம்
  7. நறுக்கிய தக்காளி -100 கிராம்
  8. மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி
  9. காஷ்மீரி மிளகாய்த்தூள் -1 தேக்கரண்டி
  10. மல்லித்தூள் -1 மே.க.
  11. கரம் மசாலா -1/2 தேக்கரண்டி
  12. நறுக்கிய மல்லி இலை - சிறிது.
  13. உப்பு - தேவைக்கு.

வழிமுறைகள்

  1. ராஜ்மாவை இரவே ஊற வைக்கவும்.
  2. இப்படி ஊற வேண்டும்.
  3. குக்கரில் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து 4 விசில் வேக வைக்கவும்.
  4. ஆவியடங்கியவுடன் திறக்கவும்.வெந்து இப்படி மெதுவாக இருக்க வேண்டும்.
  5. ஒரு கடாயில் வெண்ணெய் விடவும்.கசக்கிய சீரகம்,நறுக்கிய மிளகாய் சேர்க்கவும்.நன்கு பொரிய விடவும்.
  6. இஞ்சி பூண்டு சேர்க்கவும்.
  7. நன்கு வதக்கவும்.
  8. அத்துடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி தக்காளி சேர்த்து சிறிது உப்பு சேர்க்கவும்.
  9. நன்றாக வதங்க விடவும்.மஞ்சள்,மிளகாய்,மல்லிதூள் வகைகள் சேர்க்கவும்.
  10. ஒரு சேர பிரட்டவும்.
  11. சிறிது தண்ணீர் சேர்த்து மசாலாவை கொதிக்க விடவும்.
  12. வேக வைத்த ராஜ்மா சேர்க்கவும்.
  13. பிரட்டி விட்டு ஒரு சேர கொதிக்க விடவும்.உப்பு சரி பார்க்கவும்.
  14. கரம் மசாலா,நறுக்கிய மல்லி இலை தூவவும்.
  15. பிரட்டி சிம்மில் 5 நிமிடம் வைக்கவும்.அடுப்பை அணைக்கவும்.
  16. சுவையான ராஜ்மா மசாலா தயார்.விரும்பினால் மல்லி இலை தூவி பட்டர் சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்.
  17. சூடான சாதத்துடன் தால்,பொரியல்,ரசம்,மோர்,அப்பளம், பக்க உணவுகளோடு பரிமாறவும்.
  18. சூப்பராக இருக்கும்.எனக்கு பயறு சமையல் என்றவுடன் ராஜ்மா தான் நினைவு வந்தது.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்