வீடு / சமையல் குறிப்பு / ராஜஸ்தானி கொர்மா ரொட்டி

Photo of Rajasthani korma roti by Sumaiya Arafath at BetterButter
835
1
0.0(0)
0

ராஜஸ்தானி கொர்மா ரொட்டி

Dec-21-2018
Sumaiya Arafath
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ராஜஸ்தானி கொர்மா ரொட்டி செய்முறை பற்றி

இது ராஜஸ்தானி பிரபலமான ரொட்டி.கொர்மா என்றால் உடைத்த பாசிப்பயிறு என்று அர்த்தம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ராஜஸ்தான்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பச்சை பயறு அரை கப்
  2. கோதுமை மாவு ஒன்றரை கப்
  3. மல்லி இலை நறுக்கியது 2 மே.க
  4. உப்பு தேவைக்கு
  5. ஓமம் 1/4 தே.க
  6. மிளகாய் தூள் 1 தே.க
  7. மஞ்சள் தூள் 1/4 தே.க
  8. எண்ணை 1 மே.க
  9. நெய்

வழிமுறைகள்

  1. பச்சை பயறை மிக்ஸியில் கரகரவென்று அரைத்து கொள்ளவும்
  2. பிறகு அதை தண்ணீரில் 3 மணி நேரம் ஊறவைக்கவும்
  3. ஒரு பாத்திரத்தில் ஊறவைத்த பச்சைப் பயறு, கோதுமை மாவு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், ஓமம் உப்பு ,மல்லி இலை,எண்ணை சேர்த்து சப்பாத்தி மாவு போல் நன்றாகப் பிசையவும்
  4. அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சின்னதாக பரத்தவும்
  5. தவாவில் நெய் ஊற்றி மொருமொருவென்று சுட்டெடுக்கவும்
  6. இதை ஊறுகாய் அல்லது தங்களுக்கு விருப்பமான சட்னி தொட்டு சாப்பிடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்