வீடு / சமையல் குறிப்பு / உளுந்தம் பருப்பு குழம்பு

Photo of urad dal curry by Fathima Beevi at BetterButter
320
0
0.0(0)
0

உளுந்தம் பருப்பு குழம்பு

Dec-25-2018
Fathima Beevi
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

உளுந்தம் பருப்பு குழம்பு செய்முறை பற்றி

உளுந்தம் பருப்பு குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உளுந்தம் பருப்பு- 75 கிராம்
  2. பெரிய வெங்காயம்-1
  3. தக்காளி-2
  4. பெரிய பச்சை மிளகாய்-1
  5. மஞ்சள் தூள்- 1/4 டீ ஸ்பூன்
  6. சாம்பார் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
  7. பெருங்காயத்தூள்- ஒரு சிட்டிகை
  8. உப்பு- தேவையான அளவு
  9. மசாலாவிற்கு தேவையான பொருட்கள்:
  10. துருவிய தேங்காய்- 1/4 கப்
  11. சீரகம்- 1/4 டீ ஸ்பூன்
  12. தாளிக்க தேவையான பொருட்கள்:
  13. தேங்காய் எண்ணெய்- 1 டேபிள் ஸ்பூன்
  14. கடுகு-1/4 டீ ஸ்பூன்
  15. சீரகம்-1/4 டீ ஸ்பூன் 
  16. கருலேப்பில்லை -ஒரு கொத்து

வழிமுறைகள்

  1. மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், சீரகம்  சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்.
  2. தக்காளி, பெரிய வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
  3. உளுந்தம் பருப்பை சுத்தம் செய்து கொள்ளவும்.
  4. ஒரு குக்கரில் உளுந்தம் பருப்பு,  பச்சை மிளகாய், மஞ்சள் தூள், பெருங் காயத்தூள்,  சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கி 2 விசில் வரும் வரை வேக வைத்து எடுக்கவும்.
  5. விசில் அடங்கியதும், வேக வைத்த பருப்பு மற்றும் தண்ணீரை வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும்.
  6. பின்பு குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு, சீரகம்  பொடித்து கருலேப்பில்லை, வெங்காயம், தக்காளி  சேர்த்து வதக்கி  உப்பு சேர்த்து கிளறவும்.
  7. பின்பு சாம்பார் பொடி,  அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, வேக வைத்த உளுந்தம் பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு  வேக வைத்த தண்ணீரை சேர்த்து நன்கு கிளறி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மேலும் ஒரு விசில் வரும் வரை வேக வைக்கவும்.
  8. சூடான சாதத்துடன் பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்