வீடு / சமையல் குறிப்பு / கொள்ளு கோப்தா கிரேவி

Photo of Horse gram kofta gravy by Mughal Kitchen at BetterButter
1042
0
0.0(0)
0

கொள்ளு கோப்தா கிரேவி

Dec-25-2018
Mughal Kitchen
45 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
7 மக்கள்
பரிமாறவும்

கொள்ளு கோப்தா கிரேவி செய்முறை பற்றி

This gram is very healthy. For those who are in diet this is will give the taste of mutton. It can be served with idli dosa rice roti etc....

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 7

  1. கொள்ளு பயறு 200 கிராம்
  2. வெங்காயம் 50 கிராம்
  3. எண்ணெய் 50 கிராம்
  4. தக்காளி நான்கு
  5. தேங்காய் சிறிது
  6. வெந்தயக்கீரை சிறிது
  7. இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன்
  8. கரம் மசாலாத்தூள் ஒரு டீஸ்பூன்
  9. மல்லித்தழை சிறிது
  10. முட்டையின் வெள்ளை கரு ஒன்று
  11. அரைக்க தேவையான பொருட்கள்
  12. மல்லி ஒரு மேஜைக்கரண்டி
  13. சோம்பு ஒரு மேசைக்கரண்டி
  14. சீரகம் ஒரு டீஸ்பூன்
  15. மிளகு ஒரு டீஸ்பூன்
  16. பச்சரிசி கால் டீஸ்பூன்
  17. கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன்
  18. உளுந்தம் பருப்பு அரை டீஸ்பூன்
  19. மிளகாய் வத்தல் 4
  20. வெள்ளைப் பூண்டு 10 பல்
  21. fresh cream 2 மேஜைக்கரண்டி
  22. தயிர் ஒரு மேசைக்கரண்டி

வழிமுறைகள்

  1. கொள்ளுப் பயறை ஒரு நாள் இரவு முழுதும் ஊறவைத்து இரண்டு நாட்கள் வரை துணியில் கட்டிவைத்து முளைவிடவைத்துக் கொள்ளவும்.
  2. மிக்ஸியில் கொள்ளுப் பயறை சேர்த்து இஞ்சி பூண்டு கரம் மசாலாத்தூள் உப்பு சேர்த்து அரைக்கவும்
  3. அரைத்த பின் அதனுடன் முட்டையின் வெள்ளைக் கருவையும் மல்லிசெடி சேர்த்து நன்கு பிசைந்து வைக்கவும்
  4. வெறும் வாணலியில் அரைக்க தேவையான பொருட்களை சேர்த்து லேசாக வறுக்கவும்
  5. இரண்டு நிமிடம் லேசாக வறுத்த பின் வெங்காயம் பூண்டு தேங்காய் தக்காளி பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்
  6. வறுத்த மசாலாக்களை மிக்ஸியில் அரைத்து வைக்கவும்
  7. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணை ஊற்றி ஒரு பட்டை கிராம்பு சிறிது இஞ்சி சேர்க்கவும்
  8. பின் மிக்ஸியில் அரைத்த மசாலாவை சேர்த்து வதக்கவும்
  9. பின் இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு சிறிது தயிர் சேர்த்து உப்பு சேர்த்து கால் மணி நேரம் நன்கு கொதிக்கவிடவும்
  10. கொள்ளு அரைத்த மசாலாவை உருண்டைகளாக பிடிக்கவும்
  11. உருட்டிய கோஃப்தாக்களை கிரேவியில் சேர்க்கவும்
  12. கால் மணி நேரம் மூடி போட்டு வேக வைக்கவும் பின் வெந்தயகீரை சேர்க்கவும்
  13. 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்
  14. பொண்ணு கோஃப்தா கிரேவி ரெடி.மேலே ப்ரஷ் கிரீம் சேர்த்து அலங்கரிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்