BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / Butter Naan

Photo of Butter Naan by Priya Tharshini at BetterButter
3
1
0(0)
0

Butter Naan

Dec-27-2018
Priya Tharshini
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • మీడియం/మధ్యస్థ
  • అల్పాహారం మరియు బ్రంచ్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மைதா - 2 கப்
  2. உப்பு - தேவைக்கு
  3. பேக்கிங் பவுடர் - 1/2 தேக்கரண்டி
  4. பேக்கிங் சோடா - 1/8 தேக்கரண்டி
  5. தயிர் - 1/4 கப்
  6. பால் - 1/2 கப்
  7. தண்ணீர் - தேவைக்கு
  8. எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
  9. வெண்ணை - தேவைக்கு

வழிமுறைகள்

  1. பாத்திரத்தில் மைதா,உப்பு,பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா அனைத்தும் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  2. அதில் தயிர் மற்றும் பால் சேர்த்துக் கொள்ளவும்.
  3. அனைத்தும் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும். தண்ணீர் சேர்க்கவில்லை. பிசைந்த மாவில் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
  4. மிருதுவான மாவாக பிசைந்துக் கொள்ளவும். காயாமல் இருக்க மேலாக சிறிது எண்ணெய் தடவவும்.
  5. 3 மணி நேரம் மாவை ஊற விடவும்.
  6. சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
  7. சப்பாத்திப் போன்று சற்று மொத்தமாக தேய்த்துக் கொள்ளவும். தண்ணீர் தொட்டு மேலாக சிறுது ஒத்திக் கொள்ளவும்.
  8. பின் அடுப்பை பற்ற வைத்து, தோசைகல் தீயை குறைவில் வைத்து, அதன் மேல் தேய்த்து வைத்துள்ளதை கீழ் வருமாறு வைக்க வேண்டும்.
  9. நாணானது சற்று பபூல் வந்ததும் மறுபக்கம் திருப்பி அடுப்பில் நேராக அல்லது வைர் ரேக் மேலோ போட்டு வேக வைக்கவும்.
  10. நன்கு உப்பி மேலே வரும் போது, அடுப்பில் இருந்து எடுத்து அதன் மேல் இருபுறமும் வெண்ணெயை தடவவும்.
  11. அனைத்து உருண்டைகளையும் இதே போல் போட்டு எடுக்கவும். பட்டர் நாண் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்