வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் ப்ரைட் ரைஸ் வித் சிக்கன் மஞ்சூரியன்

Photo of Chicken fried rice with chicken Manchurian by Pavithra Prasad at BetterButter
533
0
0.0(0)
0

சிக்கன் ப்ரைட் ரைஸ் வித் சிக்கன் மஞ்சூரியன்

Dec-29-2018
Pavithra Prasad
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் ப்ரைட் ரைஸ் வித் சிக்கன் மஞ்சூரியன் செய்முறை பற்றி

சுவையான பார்டிக்கு உண்டாக்க கூடிய மெயின் டிஷ்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சிக்கன் ஃப்ரைட் ரைஸ் உண்டாக்க தேவையானவை
  2. பாஸ்மதி அரிசி 2 கப்
  3. தண்ணீர் 4 கப்
  4. முட்டை-2
  5. வேக வைத்த சிக்கன் சிறுதாக முறித்தது சிறிய ஒரு கப்
  6. பீன்ஸை சிறிதாக முறித்தது 3 டேபிள்ஸ்பூன்
  7. கேரட் சிறிதாக முறித்தது 3 டேபிள்ஸ்பூன்
  8. காப்ஸிகம் நிலத்தில் முறித்தது 2 டேபிள்ஸ்பூன்
  9. குருமிளகு பொடி 1 டேபிள்ஸ்பூன்
  10. பச்சை மிளகாய் சிறிதாக முறித்தது ஒன்று
  11. சோயா சாஸ் 1 1/2 டேபிள்ஸ்பூன்
  12. உப்பு தேவையான அளவு
  13. சிக்கன் மஞ்சூரியன் உண்டாக்க தேவையானவை
  14. பெரிய வெங்காயம் ஒன்று வட்டத்தில் முறித்தது
  15. வேக வைத்த சிக்கன் ஒரு கப்
  16. கேரட்-1
  17. கேப்சிகம் சிறிய 1 கப்
  18. சோயா சாஸ் 1 டேபிள்ஸ்பூன்
  19. டொமேட்டோ சாஸ் 2 டேபிள்ஸ்பூன்
  20. பச்சைமிளகாய் ஒன்று சிறிதாக முறித்தது
  21. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி 4 கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரில் 3 விசில் அடித்து எடுக்கவும்
  2. கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் வேக வைத்த சிக்கன், பீன்ஸ், கேரட், முட்டை, கேப்ஸிகம் சேர்த்து நன்றாக கிளறவும்
  3. இதில் தேவையான அளவு உப்பு, குறுமிளகு பொடி, சோயா சாஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்
  4. இதில் வேக வைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யவும்
  5. சிக்கன் ஃப்ரைட் ரைஸ் ரெடி
  6. ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் பெரிய வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்
  7. பின்னர் அதில் கேரட் , பச்சை மிளகாய் , சிக்கன், காப்ஸ்கிம் சேர்த்து நன்றாக வதக்கவும் செய்யவும்
  8. கடாயில் கலவை வதங்கியதும் குறுமிளகு பொடி ,உப்பு சோயா சாஸ், டொமேட்டா சாஸ் சேர்த்து மிக்ஸ் செய்யவும்
  9. பின்னர் இதற்கான தேவையான அளவு தண்ணீர் கார்ன் ஸ்டார்ச் சேர்த்து மிக்ஸ் செய்து அதில் ஊற்றவும்
  10. பின்னர் கலவை திக்கானதும் ஸ்டவ்வில் இருந்து இறக்கி வைக்கவும்
  11. சிக்கன் மஞ்சூரியன் ரெடி
  12. சுவையான சிக்கன் ப்ரைட் ரைஸ் , சிக்கன் மஞ்சூரியன் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்