வீடு / சமையல் குறிப்பு / சோயா சங்க்ஸ் ஷவர்மா சாட்சிகி ஸாஸுடன்

Photo of Soya chunks shawarma with tzatziki sauce by Sumaiya Arafath at BetterButter
796
1
0.0(0)
0

சோயா சங்க்ஸ் ஷவர்மா சாட்சிகி ஸாஸுடன்

Jan-03-2019
Sumaiya Arafath
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

சோயா சங்க்ஸ் ஷவர்மா சாட்சிகி ஸாஸுடன் செய்முறை பற்றி

ஷவர்மா துருக்கி நாட்டின் பிரபலமான உணவு.இது இறைச்சியால் செய்யப்படும் உணவு.இங்கு நான் சைவ ஷவர்மா செய்துள்ளேன்.இதில் மீல் மேக்கர் எனப்படும் சோயா சங்க்ஸால் தயாரிக்கப்பட்டுள்ளது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • ஃப்யூஷன்
  • பான் பிரை
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பீட்டா பிரட் செய்ய:
  2. மைதா 2 கப்
  3. ஈஸ்ட் 1 தே.க
  4. சர்க்கரை 1 தே.க
  5. உப்பு தேவைக்கு
  6. எண்ணை 1 மே.க
  7. பேக்கிங் தூள் 1 சிட்டிகை
  8. பால் 1/2 கப்
  9. தண்ணீர் தேவைக்கு
  10. ஸ்டபிங் செய்ய;
  11. சோயா சங்க்ஸ் 1 கப்
  12. கட்டி தயிர் 1 மே.க
  13. பூண்டு நறுக்கியது 1/2 தே.க
  14. உப்பு தேவைக்கு
  15. கரம் மசாலா 1 தே.க
  16. சீரக தூள் 1/4 தே.க
  17. எலுமிச்சை சாறு 1&1/2 தே.க
  18. எண்ணை
  19. ஸட்ஸாகி சாஸ் செய்ய;
  20. வெள்ளரி பிஞ்சு 1/2
  21. கட்டி தயிர்(வடிகட்டியது)
  22. உப்பு
  23. எலுமிச்சை சாறு 1 தே.க
  24. துருவிய பூண்டு 2
  25. ஸலாட் செய்ய;
  26. நறுக்கிய கோஸ் 1/2 கப்
  27. வெங்காயம் 1/4 கப்
  28. தக்காளி 1/2

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் பால் சர்க்கரை ஈஸ்ட் சேர்த்து மிக்ஸ் செய்து 10 நிமிடம் வைக்கவும்
  2. ஆக்டிவேட் ஆன ஈஸ்டுடன் மைதா,உப்பு,பேக்கிங் தூள் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு பிசையவும்
  3. 3 மணிநேரம், மாவு 2 மடங்காக பொங்கும் வரை மூடி வைக்கவும்
  4. பிறகு மாவை பிசைந்து சிறு உருளைகளாக்கவும்
  5. பிறகு பரத்தி சிறிது நேரம் வைக்கவும்
  6. சப்பாத்தி கல்லில் உப்பும் வரை சுட்டெடுக்கவும்
  7. சோயாவை தண்ணீரில் ஊற வைக்கவும்
  8. ஊறிய சோயாவில் உள்ள தண்ணீரை அகற்றி விட்டு அதை சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்
  9. அதில் தயிர் மற்றும் மசாலாக்களை சேர்த்து எண்ணெயில் இட்டு பொரித்தெடுக்கவும்
  10. சாஸ் செய்வதற்கு முதலில் வெள்ளரிக்காயை துருவ வேண்டும்
  11. அதிலுள்ள தண்ணீரை முழுமையாக அகற்ற வேண்டும்
  12. அதனுடன் கட்டித்தயிர் பூண்டு உப்பு எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யவும்
  13. ஸலாட் செய்ய முட்டை கோஸ்,தக்காளி,வெங்காயம் உப்பு சேர்த்து மிக்ஸ் செய்து வைக்கவும்
  14. ஒரு ரொட்டியை எடுத்து அதில் சாஸ் தடவி அதன் மேல் கோஸ் கலவை மற்றும் சோயா சங்கஸ் வைத்து மடக்கி பரிமாறவும்
  15. அல்லது எல்லாவற்றையும் ஒன்றாக மிக்ஸ் செய்து பரிமாறவும்
  16. சுவையான ஷவர்மா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்