வீடு / சமையல் குறிப்பு / பாஸ்தா சீஸ் ஒயிட் சாஸ்

Photo of Pasta cheese white sauce by பிரசன்னா பிரசன்னா NT at BetterButter
514
0
0.0(0)
0

பாஸ்தா சீஸ் ஒயிட் சாஸ்

Jan-03-2019
பிரசன்னா பிரசன்னா NT
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பாஸ்தா சீஸ் ஒயிட் சாஸ் செய்முறை பற்றி

பால் சேர்த்து செய்யும் ஒரு ஆங்கில உணவு இது

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • மீடியம்
  • கிட்ஸ் பர்த்டே
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. ஸ்பிரிங் பாஸ்தா இரண்டு கப்
  2. வெண்ணெய் மூன்று ஸ்பூன்
  3. பால் அரை லிட்டர்
  4. மைதா 2 ஸ்பூன்
  5. நறுக்கிய கேரட் ஒரு கப்
  6. பேபி corn ஒரு கை கப்
  7. சிகப்பு மிளகாய் துகள்கள் 2 ஸ்பான்
  8. மிளகு பொடித்து ஒரு ஸ்பூன்
  9. நறுக்கிய பூண்டு ஒரு ஸ்பூன்
  10. காய்ந்த கருவேப்பிலை ஒரு ஸ்பூன்
  11. துருவிய சீஸ் ஒரு கப்
  12. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. நறுக்கிய கேரட்,உதிர்ந்த இளம் மக்காச்சோளம்,பால்,சிகப்பு மிளகாய் துகள்கள்,காய்ந்த கருவேப்பிலை, சீஸ் எடுத்து கொள்ளவும்.
  2. இவ்வகையான ஸ்பிரிங் பாஸ்தாவை எடுத்து கொள்ளவும்.
  3. சீஸை துருவி கொள்ளவும்.
  4. பாஸ்தாவை சூடு தண்ணீரில் சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்து கொள்ளவும்.(கையில் சாதம் போல் பிடித்து பார்த்து வெந்ததும் தண்ணீரை வடிக்கவும்)
  5. ஒரு கடாயில் வெண்ணெய் ஊற்றி உறுகவும்.
  6. நறுக்கிய கேரட்டை சேர்த்து வதக்கவும்.
  7. உதிர்ந்த பேபி கார்ன் சேர்த்து வதக்கி தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
  8. ஒரு ஆழமான பாத்திரத்தில் மீண்டும் வெண்ணெய் சேர்த்து உறுகவும்.
  9. வெண்ணெய் உருகியதும் இரண்டு ஸ்பூன் மைதா சேர்த்து மிதமான தீயில் நைசாக ஒன்று சேர கிளறவும்.
  10. ஒன்று சேர்ந்த மைதா பேஸ்டில் காய்ச்சி ஆறவைத்த பாலை சேர்த்து மிதமான தீயில் கலக்கவும்.
  11. பாலை கலக்க,கலக்க..திக்காக வரும் போது காய்ந்த மிளகாய் துகள்கள்,காய்ந்த கருவேப்பிலை துகள்கள்,தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
  12. வெண்ணெயில் வதக்கிய கேரட்,மக்காச்சோளம் சேர்த்து கிண்டவும்.
  13. பின்பு வேக வைத்த பாஸ்தாவை சேர்த்து நன்கு கிளறவும்.மிதமான சூட்டில்(தேவை பட்டால் சிறிது காய்ச்சிய பால் சேர்த்து கொள்ளலாம் )
  14. கடைசியாக துருவிய சீஸை சேர்த்து கிளறி இறக்கவும்.
  15. சுவையான பாஸ்தா தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்