வீடு / சமையல் குறிப்பு / முந்திரி பாதாம் கேக்

Photo of Cashuw nut and badam cake by sudha rani at BetterButter
394
0
0.0(0)
0

முந்திரி பாதாம் கேக்

Jan-13-2019
sudha rani
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
105 நிமிடங்கள்
சமையல் நேரம்
7 மக்கள்
பரிமாறவும்

முந்திரி பாதாம் கேக் செய்முறை பற்றி

விருந்துல பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் இந்த ஸ்வீட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 7

  1. முந்திரி 150 கிராம்
  2. சர்க்கரை 200 கிராம்
  3. பச்சை புட் கலர் சிறிது
  4. லிக்விட் குளுக்கோஸ் 2 ஸ்பூன்
  5. நெய் 2 ஸ்பூன்
  6. ரோஸ் எசென்ஸ் சிறிது
  7. பாதாம் 200கிராம்
  8. சர்க்கரை 200 கிராம்
  9. பாதாம் எசென்ஸ் 2 சொட்டு
  10. வெள்ளரி விதை 2 டேபிள்ஸ்பூன்
  11. குங்குமப்பூ சிறிது

வழிமுறைகள்

  1. பாதாமை சுடுதண்ணீரில் ஊறவிட்டு தோல் உரித்து லேசா வறுத்து பொடித்து வைக்கவும்
  2. பின் சர்க்கரை தண்ணீர் மற்றும் குங்குமப்பூ சேர்த்து கொதிக்கவிட்டு கம்பி பதம் வந்ததும்
  3. பாதாம் பொடியை தூவி நன்கு கிளறவும்
  4. சிறிது நெய்யில் வெள்ளரி விதை சேர்த்து வறுக்கவும்
  5. பாதாம் கலவையில் வறுத்த வெள்ளரி விதை சேர்த்து நன்கு கிளறவும்
  6. நன்கு கெட்டியாக கிளறி இறக்கி பாதாம் எசென்ஸ் கலந்து ஆறவைக்கவும்
  7. முந்திரியை வறுத்து பொடித்து வைக்கவும்
  8. சர்க்கரை உடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு கம்பி பதம் வந்ததும் பொடித்த முந்திரி சேர்த்து வேகமாக கிளறவும்
  9. சற்று சுருண்டு வரும் போது லிக்விட் குளுக்கோஸ் மற்றும் பச்சை நிறம் சேர்த்து கலந்து கொள்ளவும்
  10. அடுப்பில் இருந்து இறக்கி ரோஸ் எசென்ஸ் சேர்த்து தொடர்ந்து கிளறவும்
  11. சப்பாத்தி மாவு போல் சுருண்டு வரும்
  12. பட்டர் பேப்பரில் சிறிது நெய் விட்டு முந்திரி கலவையை 1/4 அங்குல கணத்தில் திரட்டவும்
  13. அதில் பாதாம் கலவையை சற்று கணமாக வைக்கவும்
  14. பின் மிகவும் மெதுவாக உருட்டி சுமார் ஒரு மணி நேரம் வரை வைக்கவும்
  15. (கொழுக்கட்டை பூரணம் வைத்து மடித்து உருட்டுவது போல்)
  16. பின் மெதுவாக லைட்டா சப்பாத்தி கட்டையால் தேய்த்து விடவும்
  17. பின் கட் செய்து கொள்ளவும்
  18. லிக்விட் குளுக்கோஸ் சேர்ப்பதால் முந்திரி கலவை இறுகாமல் சப்பாத்தி மாவு போல் நன்கு திரட்ட முடியும்
  19. பாதாம் கலவையை கண்டிப்பாக நன்கு கெட்டியாக கிளறி இறக்கவும்
  20. இரண்டு விதமான மணங்களிலும் இரண்டு விதமான வண்ணங்களிலும் விருந்தில் அசத்த மிகவும் நன்றாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்