வீடு / சமையல் குறிப்பு / தயிர் சாதம்

Photo of Curd rice by sudha rani at BetterButter
230
0
0.0(0)
0

தயிர் சாதம்

Jan-13-2019
sudha rani
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தயிர் சாதம் செய்முறை பற்றி

எவ்வளவு விதம் உணவு இருந்தாலும் இறுதியில் சிறிதாவது காரம் இல்லாமல் ஒரு உணவு அவசியம் அந்த மாதிரி ருசியான தயிர் சாதம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வேகவைத்த சாதம் 2கப்
  2. தயிர் 1 லிட்டர்
  3. பால் 1 கப்
  4. ப்ரஷ் க்ரீம் 1/4 கப் (50 மில்லி)
  5. பச்சை மிளகாய் 3
  6. உப்பு தேவையான அளவு
  7. தாளிக்க:
  8. எண்ணெய் 4 டேபிள்ஸ்பூன்
  9. கடுகு 2 ஸ்பூன்
  10. பெருங்காயத்தூள் 1/4 ஸ்பூன்
  11. கடலைப் பருப்பு 2 டேபிள்ஸ்பூன்
  12. உடைத்த உளுந்தம் பருப்பு 2 டேபிள்ஸ்பூன்
  13. வரமிளகாய் 4
  14. கறிவேப்பிலை சிறிது
  15. நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் 1 கப்
  16. அலங்கரிக்க:
  17. பொடியாக நறுக்கிய வெங்காயம் 1 கப்
  18. மாதுளை முத்துக்கள் 1/2 கப்
  19. பொடியாக நறுக்கிய கேரட்
  20. முந்திரி 50 கிராம்
  21. கொத்தமல்லி தழை சிறிது

வழிமுறைகள்

  1. தயிரை ஒரு மஸ்லின் துணியில் வடிகட்டி சுமார் ஒரு மணி நேரம் வரை வைக்கவும்
  2. பின் தயிருடன் வேகவைத்த சாதம் மற்றும் தேவையான அளவு உப்பு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு கிளறவும்
  3. பின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு கறிவேப்பிலை வரமிளகாய் பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும்
  4. பின் கடலைப்பருப்பு மற்றும் உளுந்து சேர்த்து வதக்கவும்
  5. பின் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  6. வெங்காயம் பொன்னிறமாக வதக்கி பின் இறக்கி சாதத்துடன் சேர்த்து நன்கு கிளறவும்
  7. பின் பால் மற்றும் ப்ரஷ் க்ரீம் சேர்த்து நன்கு கிளறவும்
  8. இறுதியில் சிறிது நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் மாதுளை முத்துக்கள் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கேரட் சேர்த்து நன்கு கிளறவும்
  9. பால் மற்றும் க்ரீம் சேர்ப்பதால் இறுகாது மற்றும் புளிக்காது

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்