வீடு / சமையல் குறிப்பு / ஆந்திரா மிளகு புளியோதரை

Photo of Andhra style Pepper Tamarind Rice by Priya Suresh at BetterButter
554
0
0.0(0)
0

ஆந்திரா மிளகு புளியோதரை

Jan-16-2019
Priya Suresh
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஆந்திரா மிளகு புளியோதரை செய்முறை பற்றி

காரசாரமான புளிப்பான ஆந்திரா ஸ்டைல் மிளகு புளியோதரை.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஆந்திரப்ரதேஷ்
  • சிம்மெரிங்
  • ரோசஸ்டிங்
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 2cup வடித்த சாதம்
  2. 1கப் கெட்டியான புளிக்கரைசல்
  3. 4 காய்ந்தமிளகாய்
  4. 2 டீஸ்பூன் மிளகு
  5. 1 டீஸ்பூன் கடுகு
  6. 1டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு
  7. 1 டேபிள் ஸ்பூன் உளுந்து
  8. வேர்கடலை சிறிதளவு
  9. 1/2டீஸ்பூன் வெல்லம்
  10. 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  11. 1/4டீஸ்பூன் பெருங்காயம்
  12. கருவேப்பிலை சிறிதளவு
  13. 3 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்
  14. உப்பு தேவைக்கு

வழிமுறைகள்

  1. வாணலியில் நல்லெண்ணெயை ஊற்றி காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு ,கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு சிவக்க வறுக்கவும்
  2. தாளித்தவற்றுடன் கருவேப்பிலை, பெருங்காயம் ,வேர்க்கடலை சேர்த்து வறுக்கவும்
  3. புளிக்கரைசலை சேர்த்து கொதிக்க விடவும்
  4. வாணலியில் மிளகை நன்றாக வறுக்கவும்
  5. வறுத்த மிளகு நன்றாக ஆறியதும் பொடியாக அரைத்துக் கொள்ளவும்
  6. அடிக்கும் புளிக்கரைசலுடன் மஞ்சள்தூள், வெல்லம் ,அரைத்து வைத்த மிளகு பொடியை தூவி கொதிக்கவிடவும்
  7. மிதமான தீயில் அடுப்பை வைத்து எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விட்டு அடுப்பை நிறுத்தவும்
  8. வடித்து வைத்த சாதத்துடன் தேவையான புளி பேஸ்ட் சேர்த்து கலந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்
  9. மிளகு புளியோதரை ரெடி
  10. மீதமுள்ள புளி பேஸ்ட் ஐ ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்