வீடு / சமையல் குறிப்பு / வாளை கருவாடு வறுவல்

Photo of Valai Dry Fish Fry by Jayasakthi Ekambaram at BetterButter
1334
0
0.0(0)
0

வாளை கருவாடு வறுவல்

Jan-19-2019
Jayasakthi Ekambaram
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வாளை கருவாடு வறுவல் செய்முறை பற்றி

கருவாடுடன் காரப் பொடி சேர்த்து செய்யும் காரசாரமான வறுவல்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வாளை கருவாட்டு துண்டு 8
  2. வெங்காயம் ஒன்று
  3. தக்காளி ஒன்று
  4. பூண்டுப்பற்கள் 10
  5. குழம்பு மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன்
  6. தூள் உப்பு முக்கால் ஸ்பூன்
  7. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கருவாடு துண்டுகளை மஞ்சள் தூள் சேர்த்து வெதுவெதுப்பான நீரில் 20 நிமிடம் ஊற வைத்து நன்றாக தேய்த்துக் கழுவி கொள்ளவும்
  2. அடுப்பில் 4 ஸ்பூன் எண்ணெயை சூடுபடுத்தி வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வறுக்கவும்
  3. பிறகு நறுக்கிய பூண்டு பற்களைப் போட்டு நன்றாக வதக்கவும்
  4. பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்
  5. கருவாடு துண்டுகளை சேர்த்து ஒரு 2 நிமிடம் வதக்கவும்
  6. மிளகாய்த் தூள் உப்பு தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்
  7. நன்றாக கொதித்தவுடன் ஒரு மூடி போட்டு சிறிய தீயில் நன்றாக வேக விடவும்
  8. கருவாடு நன்றாக வெந்து தண்ணீர் சுண்டிய பிறகு மேலும் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்றாக ரோஸ்ட் ஆக வறுக்கவும்
  9. அடுப்பை ஆஃப் செய்து கருவாடை தட்டில் எடுத்து வைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்