வீடு / சமையல் குறிப்பு / மிளகு குழம்பு

Photo of Pepper Kuzhambu by Menaga Sathia at BetterButter
226
1
0.0(0)
0

மிளகு குழம்பு

Jan-20-2019
Menaga Sathia
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மிளகு குழம்பு செய்முறை பற்றி

காரசாரமான இந்த குழம்பு குளிர்காலத்திற்கும்,மூக்கடைப்பு இருக்கும் நேரத்திலும் செய்து சாப்பிட நன்றாக இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. புளி -1 எலுமிச்சையளவு
  2. உப்பு - தேவைக்கு
  3. நல்லெண்ணெய் -3 டேபிள்ஸ்பூன்
  4. மஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன்
  5. வரமிளகாய் -2
  6. மிளகு -2 டேபிள்ஸ்பூன்
  7. துவரம்பருப்பு -2 டீஸ்பூன்
  8. கறிவேப்பிலை-1 ஈர்க்கு
  9. கட்டி பெருங்காயம் -1/8 டீஸ்பூன்
  10. கடுகு -1/2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. புளியை சுடுநீரில் ஊறவைத்து 1&1/2 கப் அளவில் கரைத்து வடிகட்டவும்.
  2. கடாயில் 2டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கட்டி பெருங்காயம்,காய்ந்த மிளகாய், துவரம்பருப்பு,மிளகு ,கறிவேப்பிலை என ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு வறுக்கவும்.
  3. ஆறியதும் சிறிது நீர் விட்டு மைய அரைத்து புளிகரைசலில் உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவும்.
  4. சட்டியில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து தாளித்து புளிகரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.
  5. குழம்பு நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்