வீடு / சமையல் குறிப்பு / "மஸாலா ஃப்ரைடு இட்டிலி"

Photo of Masala fried idly by Navas Banu L at BetterButter
6
0
0.0(0)
0

"மஸாலா ஃப்ரைடு இட்டிலி"

Jan-21-2019
Navas Banu L
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

"மஸாலா ஃப்ரைடு இட்டிலி" செய்முறை பற்றி

மஸாலா இட்லி ஃப்ரை தேவையான பொருட்கள் ஆறிய இட்டிலி - 7 உளுந்தம் பருப்பு கடுகு கறிவேப்பிலை இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூண் பச்சை மிளகு - 2 பெரிய வெங்காயம் சிறியதாக நறுக்கியது -2 பழுத்த தக்காளி -1 சிறிதாக நறுக்கியது சோயா சாஸ் - 1 டீஸ்பூண் லெமன் ஜூஸ் -1 டீஸ்பூண் மஞ்சள் பொடி - கால் டீ ஸ்பூண் மிளகு பொடி - அரை டீஸ்பூண் நல்ல மிளகு - கால் டீஸ்பூண் கரம் மஸாலா - 2 நுள்ளு காயப்பொடி - சிறிதளவு மல்லி தழை செய் முறை :- முதலில் இட்டிலியை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். ஒரு ஃப்ரையிங் பேன் அடுப்பில் வைத்து எண்ணை ஊற்றி சூடானதும் வெட்டிய இட்டிலி துண்டுகளை போட்டு ஃப்ரை செய்து வைத்துக் கொள்ளவும். ஒரு கடாய் அடுப்பில் வைத்து 2 டேபிள் ஸ்பூண் எண்ணை விட்டு சூடானதும் கடுகு ,உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். இஞ்சி பூடு விழுது சேர்க்கவும். பச்சை மிளகு நறுக்கி சேர்க்கவும். நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். அதில் மஞ்சள் பொடி, மிளகு பொடி,பெப்பர் பொடி, கரம் மஸாலா பொடி, காயப்பொடி எல்லாம் சேர்த்து நன்றாக வதக்கவும். எல்லாம் நன்றாக வதங்கி பச்சை மணம் மாறியதும் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். உப்பு சேர்க்கவும். சோயா சாஸ் சேர்க்கவும்.ஒரு கப் கொதித்த தண்ணீர் சேர்த்து எல்லாம் நன்றாக மிக்ஸ் பண்ணி கொதிக்க விடவும். மஸாலா நன்றாக கொதித்து இறுகி வரும் போது ஃப்ரை பண்ணி வைத்திருக்கிற இட்டிலியை இந்த மஸாலாவில் சேர்த்து,லெமன் ஜூஸும் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணிக் கொடுக்கவும்.உப்பு பார்த்து தேவைக்கு சேர்த்து கொள்ளவும். மல்லி தழை தூவி இறக்கவும்.

செய்முறை டாக்ஸ்

 • ஈஸி
 • டிபன் ரெசிப்பிஸ்
 • சௌத்இந்தியன்
 • ஷாலோ ஃபிரை
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

 1. இட்டிலி - 7
 2. தாளிக்க எண்ணை, - 2 டேபிள் ஸ்பூண்
 3. உளுந்தம் பருப்பு
 4. கடுகு
 5. கறிவேப்பிலை
 6. இஞ்சி பூடுவிழுது - 2 டீஸ்பூண்
 7. பெரிய உள்ளி சிறிதாக நறுக்கியது - 2
 8. தக்காளி சிறிதாக நறுக்கியது - 2
 9. மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூண்
 10. மிளகு பொடி - 1/2 டீஸ்பூண்
 11. பெப்பர் பொடி - 1/4 டீஸ்பூண்
 12. கரம் மஸாலா - 2 நுள்ளு
 13. காயப்பொடி - சிறிதளவு
 14. சோயா சாஸ் - 1 டீஸ்பூண்
 15. லெமன்ஜூஸ் - 1 டீஸ்பூண்
 16. மல்லித்தழை
 17. சுடுதண்ணீர் - 1 கப்

வழிமுறைகள்

 1. இட்டிலியை துண்டுகளாக வெட்டி எண்ணையில் பொரித்தெடுக்கவும்.
 2. . கடாயில் எண்ணை விட்டு சூடானதும் உளுந்தம்பருப்பு ,கடுகு ,கறிவேப்பிலை போட்டு தாளித்து,இஞ்சி பூடு விழுது, பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி, அதனுடன் எல்லா மஸாலா பொடியும் சேர்த்து நன்றாக வதக்கி பச்சை மணம் மாறியதும் தக்காளி சேர்த்து வதக்கி சோயா சாஸும் உப்பும் சேர்த்து அதனுடன் ஒரு கப் சூடு தண்ணீரையும் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும்.
 3. கொதித்து மஸாலா இறுகி வரும் போது இட்டிலியை சேர்க்கவும்.
 4. லெமன் ஜூஸ் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணி மல்லி தழை தூவி இறக்கவும். .
 5. இதைசூடாக சாப்பிட வேண்டும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்