வீடு / சமையல் குறிப்பு / வறுத்த கார கறி கிரேவி

Photo of Spicy fry chicken gravy by Lalitha Ananth at BetterButter
558
1
0.0(0)
0

வறுத்த கார கறி கிரேவி

Jan-24-2019
Lalitha Ananth
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வறுத்த கார கறி கிரேவி செய்முறை பற்றி

ஸ்பைசி ஃப்ரைட் சிக்கன் கிரேவி பண்ணிப்பாருங்க சப்பாத்தி தோசையுடன் பரிமாறலாம்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சிக்கன் அரை கிலோ
  2. சோள மாவு 1 டேபிள்ஸ்பூன்
  3. மைதா 1 டேபிள்ஸ்பூன்
  4. மிளகுத்தூள் தேவையான அளவு
  5. மிளகாய்த்தூள் தேவையான அளவு
  6. மஞ்சள் தூள் தேவையான அளவு
  7. கரம் மசாலா தேவையான அளவு
  8. சீரகம் தூள் தேவையான அளவு
  9. மல்லி தூள் தேவையான அளவு
  10. கஸ்தூரி மேத்தி ஒரு டீஸ்பூன்
  11. 2 வெங்காயம்
  12. மிளகாய் ஒன்று
  13. மல்லி புதினா தேவையான அளவு
  14. பூண்டு 50 கிராம்
  15. இஞ்சி பூண்டு விழுது தேவையான அளவு
  16. தக்காளி விழுது ஒரு கப்
  17. பட்டை கிராம்பு அன்னாசிப்பூ ஏலக்காய் தேவையான அளவு
  18. சிக்கன் குழம்பு தூள் தேவையான அளவு
  19. சோம்பு ஒரு டேபிள் ஸ்பூன்
  20. கருவேப்பிலை
  21. எண்ணெய் தேவையான அளவு
  22. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. சிக்கன் உப்பு மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் மல்லித்தூள் சீரகத்தூள் சிக்கன் மசாலா சோள மாவு மைதா மாவு ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்
  2. அரைமணிநேரம் பிறகு எண்ணெயை சூடாக்கி சிக்கனை சேர்க்கவும்
  3. சிக்கன் சிவந்து வரும் வரை வறுத்து எடுக்கவும்
  4. வெங்காயம் பூண்டு பச்சை மிளகாய் புதினா மல்லி அரைத்து எடுத்துக்கலாம்
  5. வாணலியில் எண்ணெய் பட்டை கிராம்பு ஏலக்காய் அன்னாசி பூ கறிவேப்பிலை இஞ்சி பூண்டு விழுது அரைத்த வெங்காய விழுது சேர்த்து வதக்கவும்
  6. வெங்காய விழுது வதங்கியவுடன் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் மல்லித்தூள் கரம் மசாலா தூள் சீரகத்தூள் மிளகுத்தூள் உப்பு சேர்த்து வதக்கவும்
  7. சிக்கன் குழம்பு தூள் தேவையான தண்ணீர் சேர்க்கவும்
  8. மசாலா கொதித்து வந்ததும் வறுத்து சிக்கனை சேர்க்கவும்
  9. டேபிள் ஸ்பூன் கஸ்தூரி மேத்தி சேர்த்து கொத்தமல்லி தழை தூவி அடுப்பை ஆப் பண்ணவும்
  10. இப்போது சுவையான காரமான ஸ்பைஸி சிக்கன் கிரேவி தயார்
  11. ஸ்பைசி வ்ரை சிக்கன் கிரேவி உடன் சப்பாத்தியை சேர்த்து பரிமாறுங்கள்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்