வீடு / சமையல் குறிப்பு / "தயிர் சிக்கன் "

Photo of Curd chicken by Navas Banu L at BetterButter
312
0
0.0(0)
0

"தயிர் சிக்கன் "

Jan-24-2019
Navas Banu L
900 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

"தயிர் சிக்கன் " செய்முறை பற்றி

"தயிர் சிக்கன் " தேவையான பொருட்கள் கோழி - 1/2 கிலோ கட்டி தயிர் - 1 கப் இஞ்சி - ஒரு துண்டு பூண்டு - 8 பல் சோம்பு - 1 டேபிள் ஸ்பூண் நல்லமிளகு - 1/ 2 டேபிள் ஸ்பூண் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூண் மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூண் மல்லிதூள் - 1/2 டேபிள் ஸ்பூண் ஜீரக தூள் - 1/2 டேபிள் ஸ்பூண் லெமன் ஜூஸ் - 1 டேபிள் ஸ்பூண் உப்பு தேவையான அளவு எண்ணை - 3 டேபிள் ஸ்பூண் கரம் மஸாலா - 1/4 டீஸ்பூண் செய் முறை கோழியை கழுவி சுத்தம் செய்யவும். இஞ்சி, சோம்பு, பூண்டு, நல்ல மிளகு இவற்றை நன்றாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த இந்த மஸாலாவையும் ,தயிரையும், மேற் கூறிய மஸாலா தூள் அனைத்தையும் கோழியில் சேர்த்து தேவைக்கு உப்பும் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணி 10 நிமிடம் ஊற வைக்கவும். கடாய் அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணை ஊற்றி அதில் இந்த கோழிக் கலவையை சேர்த்து நன்றாக வேக விடவும். தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியமில்லை. தயிரில் உள்ள தண்ணீரிலேயே கோழி வெந்து விடும். தண்ணீர் வற்றி கொஞ்சம் ட்ரை ஆனதும் மல்லி தழை தூவி இறக்கவும்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • சௌத்இந்தியன்
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோழி - 1/2 கிலோ
  2. கட்டி தயிர் - 1 கப்
  3. இஞ்சி - 1 துண்டு
  4. பூண்டு - 8 பல்
  5. சோம்பு - 1 டேபிள் ஸ்பூண்
  6. நல்லமிளகு - 1/2 டேபிள் ஸ்பூண்
  7. மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூண்
  8. மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூண்
  9. மல்லி தூள் - 1/2 டேபிள் ஸ்பூண்
  10. ஜீரக தூள் - 1/2 டேபிள் ஸ்பூண்
  11. லெமன் ஜூஸ் - 1 டேபிள் ஸ்பூண்
  12. உப்பு தேவையான அளவு
  13. எண்ணை - 3 டேபிள் ஸ்பூண்

வழிமுறைகள்

  1. 1.கோழியை சுத்தம் செய்து கொள்ளவும்.
  2. 2.இஞ்சி, சோம்பு, பூண்டு, நல்ல மிளகு இவற்றை நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  3. 3.இந்த அரைத்த மஸாலாவும் மேற் கூறிய எல்லா மஸாலா தூள்களும், தயிரும், உப்பும் கோழியில் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணி பத்து நிமிடம் ஊற வைக்கவும்.
  4. 4.கடாய் அடுப்பில் வைத்து எண்ணை ஊற்றவும்.
  5. 5. எண்ணை சூடானதும் ஊற வைத்த கோழியைச் சேர்த்து நன்றாக வேக விடவும்.
  6. 6.தண்ணீர் சேர்க்க வேண்டிய தேவை இல்லை.தயிரில் உள்ள தண்ணீரிலேயே கோழி வெந்து விடும்.
  7. 7.தயிர் சிக்கன் கிரேவியாக வேண்டும் என்றால் கிரேவியாக இறக்கவும்.ட்ரையாக வேண்டும் என்றால் தண்ணீர் வற்றி கொஞ்சம் ட்ரை ஆனதும் அரை டீஸ்பூண் கரம் மஸாலாவும்,லெமன் ஜுஸும் சேர்த்து நனறாக கிளறி மல்லி தழை தூவி இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்