வீடு / சமையல் குறிப்பு / முருங்கை நெய் மீன் கருவாட்டு குழம்பு

Photo of Ghee dry fish kolampu by Lalitha Ananth at BetterButter
1139
2
0.0(0)
0

முருங்கை நெய் மீன் கருவாட்டு குழம்பு

Jan-27-2019
Lalitha Ananth
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

முருங்கை நெய் மீன் கருவாட்டு குழம்பு செய்முறை பற்றி

கருவாட்டுக் குழம்பு எப்படி செஞ்சு பாருங்க வேணான்னு சொல்லவே மாட்டாங்க

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. நெய் மீன் கருவாடு 4 துண்டு
  2. முருங்கைக்காய் 2
  3. சின்ன வெங்காயம் ஒரு கப்
  4. பூண்டு அரை கப்
  5. பச்சைமிளகாய்-2
  6. தேங்காய் விழுது ஒரு கப்
  7. தக்காளி 4
  8. தட்டாம் பயறு 100 கிராம்
  9. நல்லெண்ணெய் அரை கப்
  10. கடுகு ஒரு ஸ்பூன்
  11. உளுந்து ஒரு ஸ்பூன்
  12. வெந்தயம் ஒரு ஸ்பூன்
  13. புளி 50 கிராம்
  14. குழம்பு மிளகாய் தூள் 4 டீஸ்பூன்
  15. உப்பு தேவையான அளவு
  16. கருவேப்பிலை தேவையான அளவு
  17. கொத்தமல்லி தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்து வெந்தயம் சேர்க்கவும்
  2. கடுகு உளுந்து வெந்தயம் பொரிந்ததும் கறிவேப்பிலை பச்சைமிளகாய் சேர்க்கவும்
  3. வெங்காயம் பூண்டு சேர்த்து வதக்கவும்
  4. வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்
  5. தக்காளி நன்கு வதங்கியவுடன் முருங்கைக்காயை சேர்க்கவும்
  6. முருங்கைக்காய் வதங்கியவுடன் குழம்பு தூள் புளி கரைசல் சேர்க்கவும்
  7. தேங்காய் விழுது சேர்க்கவும்
  8. தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  9. வேகவைத்த தட்டாம்பயறு கருவாடு துண்டு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்
  10. குழம்பு நன்கு கொதித்தவுடன் கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும்
  11. சுவையான முருங்கை நெய் மீன் கருவாடு குழம்பு ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்