வீடு / சமையல் குறிப்பு / வெஜ் பிரியாணி

Photo of Veg briyani by sudha rani at BetterButter
479
0
0.0(0)
0

வெஜ் பிரியாணி

Jan-28-2019
sudha rani
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
75 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

வெஜ் பிரியாணி செய்முறை பற்றி

இந்த ரெசிப்பி விருந்துல செய்தது இதுல கொடுத்துள்ள அளவு சுமார் 60 பேருக்கு சரியாக இருக்கும் சமையல் பழக ஆரம்பித்த போது 1 கிலோ அரிசிக்கு சமைக்கறதே பெரிய விசயமாக இருந்தது ஆனால் இப்போ 60 பேருக்கு சமைக்கற அளவுக்கு முடியுது ஆச்சரியமாக இருக்கிறது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. தரமான பொன்னி அரிசி 16 படி
  2. வெங்காயம் 3 கிலோ
  3. தக்காளி 6 கிலோ
  4. இஞ்சி 1/2 கிலோ
  5. பூண்டு 3/4 கிலோ
  6. கேரட் 2 கிலோ
  7. பீன்ஸ் 2 கிலோ
  8. பட்டாணி 2 கிலோ
  9. சின்ன சோயா பீன்ஸ் 1 கிலோ
  10. பச்சை மிளகாய் 1/4 கிலோ
  11. கறிமசால் தூள் 50 கிராம்
  12. பிரியாணி தூள் 50 கிராம்
  13. மிளகாய்த்தூள் 40 கிராம்
  14. மஞ்சள் தூள் 3 ஸ்பூன்
  15. நெய் 1/4 லிட்டர்
  16. கடலை எண்ணெய் 2 லிட்டர்
  17. உப்பு தேவையான அளவு
  18. தண்ணீர் 30 லிட்டர்
  19. புதினா 1 கட்டு
  20. கொத்தமல்லி தழை 1 கட்டு
  21. கறிவேப்பிலை சிறிது
  22. கடுகு 50 கிராம்
  23. சோம்பு 20 கிராம்
  24. பட்டை 15
  25. கிராம்பு 15
  26. ஏலக்காய் 15
  27. பிரியாணி இலை 15

வழிமுறைகள்

  1. அரிசியை 1 மணி நேரம் வரை ஊறவிடவும்
  2. சோயா பீன்ஸ் ஐ அரை மணி நேரம் வரை ஊற வைத்து பின் நன்கு தண்ணீரை பிழிந்து எடுக்கவும்
  3. பட்டாணி ஐ முதல் நாள் இரவே ஊற வைத்து விடவும்
  4. வெங்காயம் தக்காளி கேரட் பீன்ஸ் பச்சை மிளகாய் ஆகியவற்றை தனித்தனியாக நறுக்கி அலசி வைக்கவும்
  5. இஞ்சி பூண்டு தோல் உரித்து நன்கு அரைத்து எடுக்கவும்
  6. வாணலியில் எண்ணெய் மற்றும் சிறிது நெய் விட்டு சூடானதும் கடுகு சோம்பு பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை சேர்த்து வதக்கவும்
  7. பின் நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை பச்சைமிளகாய் புதினா முக்கால் பாகம் சேர்த்து வதக்கவும்
  8. பின் அரைத்த இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  9. பின் தக்காளி மற்றும் உப்பு மற்றும் தூள் வகைகள் சேர்த்து வதக்கவும்
  10. பின் கேரட் பீன்ஸ் பட்டாணி மற்றும் சோயா பீன்ஸ் சேர்த்து வதக்கவும்
  11. பின் தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்
  12. பின் அலசி வடிகட்டிய அரிசியை சேர்த்து நன்கு கலந்து கொதிக்கவிடவும்
  13. அவ்வப்போது தொடர்ந்து கிளறி கொண்டே இருக்கவும்
  14. அரிசி முக்கால் பாகம் வெந்ததும் (தண்ணீர் வற்றி விடும்) மீதி நெய் கொத்தமல்லி தழை மீதமுள்ள புதினா சேர்த்து பரவலாக தூவி விடவும்
  15. தீயை முழுவதுமாக குறைத்து வைத்து மூடி வைத்து 10 நிமிடங்கள் கழித்து தீயை முழுவதுமாக அனைத்து விடவும்
  16. தொடர்ந்து நன்கு கிளறி பின் மீண்டும் மூடி வைத்து 20 நிமிடங்கள் வரை வைத்து பின் இறக்கி மீண்டும் ஒரு முறை நன்கு கிளறி விடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்