வீடு / சமையல் குறிப்பு / டபிலி சிக்கன் கிரேவி

Photo of Tabili chicken gravy by Meera Ansari at BetterButter
2484
2
0.0(0)
0

டபிலி சிக்கன் கிரேவி

Jan-29-2019
Meera Ansari
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

டபிலி சிக்கன் கிரேவி செய்முறை பற்றி

இது ஒரு அற்புதமான அரேபியன் சிக்கன் கிரேவி 12 முக்கியமான பொருள்களை கொண்டு செய்யப்படும் ஒரு காரசாரமான கிரேவி

செய்முறை டாக்ஸ்

  • ஈரானிய
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. சின்ன வெங்காயம் 20
  2. தக்காளி நான்கு
  3. காய்ந்த மிளகாய் ஆறு
  4. மல்லி 2 மேஜை கரண்டி
  5. கசகசா 1 மேஜைக்கரண்டி
  6. மிளகு ஒரு மேஜைக்கரண்டி
  7. சீரகம் ஒரு மேசைக்கரண்டி
  8. ஏலக்காய்-3
  9. கிராம்பு-2
  10. பட்டை ஒன்று
  11. ஓமம் ஒரு மேஜைக்கரண்டி
  12. பொரிகடலை ஒரு மேஜைக்கரண்டி
  13. வேர்க்கடலை 2 மேஜைக்கரண்டி
  14. முந்திரிப்பருப்பு 12
  15. இஞ்சி பூண்டு விழுது 3 மேஜைக்கரண்டி
  16. சிக்கன் ஒரு கிலோ
  17. தயிர் 2 மேஜைக்கரண்டி
  18. மிளகாய் தூள் அரை மேசைக்கரண்டி
  19. மஞ்சள் தூள் அரை மேசைக்கரண்டி
  20. நெய் ஒரு மேஜைக்கரண்டி
  21. நல்லெண்ணெய் 2 மேசைக்கரண்டி
  22. வெண்ணெய் 1 மேசைக்கரண்டி
  23. மல்லி இலை தேவையான அளவு
  24. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் காய்ந்த மிளகாயில் இருந்து முந்திரிப்பருப்பு வரை தனித்தனியாக வெறும் கடாயில் வறுத்து கொள்ளவும்
  2. வேர்க்கடலையை கடைசியாகச் சேர்க்கவும்
  3. சிக்கனை தயிர் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்
  4. மேலே குறிப்பிட்ட 12 பொருட்களும் ஆறியதும் மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
  5. வெங்காயம் தக்காளியை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
  6. கடாய் காய்ந்ததும் நெய் நல்லெண்ணெய் மற்றும் வெண்ணெய் சேர்க்கவும்
  7. எண்ணெய் காய்ந்ததும் வெங்காயம் தக்காளி கலவையை சேர்க்கவும்
  8. பச்சை வாசனை போக நன்கு வதக்கவும்
  9. மிதமான தீயில் வைத்து 10 நிமிடங்கள் மூடி போடவும்
  10. இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்
  11. இரண்டு நிமிடங்கள் நன்கு கிளறி விடவும்
  12. பின்பு அரைத்து வைத்த மசாலாவை சேர்க்கவும்
  13. மசாலா பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும்
  14. பின்பு சிக்கனை சேர்க்கவும்
  15. மசாலாவுடன் சிக்கனை நன்கு கிளறியதும் ஒரு ஸ்பூன் தயிர் சேர்க்கவும்
  16. மல்லி இலைகளை சேர்க்கவும்
  17. பிறகு உப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைக்கவும்
  18. சிக்கன் நன்கு வெந்த உடன் சிறிது கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்