வீடு / சமையல் குறிப்பு / புளி இஞ்சி( ஓணம் சத்யா ரெசிப்பி)

Photo of Puli inji by Fathima Beevi at BetterButter
135
0
0.0(0)
0

புளி இஞ்சி( ஓணம் சத்யா ரெசிப்பி)

Jan-29-2019
Fathima Beevi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

புளி இஞ்சி( ஓணம் சத்யா ரெசிப்பி) செய்முறை பற்றி

புளி இஞ்சி( ஓணம் சத்யா ரெசிப்பி)

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • கேரளா
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. இஞ்சி- 25 கிராம்
  2. புளி- ஒரு நெல்லிக்காய் அளவு
  3. பச்சைமிளகாய்-2
  4. மிளகாய் தூள்-1/2 டீ ஸ்பூன்
  5. மஞ்சள் தூள்-1/4 டீ ஸ்பூன்
  6. பெருங்காயத்தூள்-ஒரு சிட்டிகை
  7. வெல்லம்- 2 டேபிள் ஸ்பூன்
  8. உப்பு- தேவையான அளவு
  9. பொடித்த வெந்தயம்- 1/4 டீ ஸ்பூன்
  10. தாளிக்க தேவையான பொருட்கள்:  
  11. தேங்காய் எண்ணெய்-1 டேபிள் ஸ்பூன்
  12. கடுகு-1/2 டீ ஸ்பூன்
  13. உளுந்தம்பருப்பு-1/2 டீ ஸ்பூன்
  14. காய்ந்த மிளகாய் வற்றல்-1
  15. கருலேப்பில்லை-ஒரு கொத்து

வழிமுறைகள்

  1. புளி மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்து வடிகட்டி  வைக்கவும்
  2. இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  3. ஒரு பாத்திரத்தில் வடிகட்டிய புளி கரைசல், மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு மற்றும் வெல்லம் சேர்த்து 10 நிமிடம் மிதமான சூட்டில் கொதிக்க விடவும்.
  4. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு, உளுந்தம் பருப்பு பொடித்து, கருலேப்பில்லை, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் வற்றல், இஞ்சி  சேர்த்து வதக்கவும்.
  5. இஞ்சி நன்றாக மொருகல் ஆனதும், புளி மசாலா கலவையை ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.
  6. நன்றாக தண்ணீர் வற்றிய பின்பு, வெந்தய பொடி சேர்த்து மிதமான சூட்டில் கொதிக்க விட்டு  இறக்கவும்.
  7. புளி இஞ்சியை குளிர வைத்து காற்று புகாத ஒரு ஜாடியில் போட்டு வைக்கவும். ஒரு வாரம் வரை பிரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்