வீடு / சமையல் குறிப்பு / முட்டை குருமா

Photo of Egg kuruma by Subha Shivaguru at BetterButter
332
2
0.0(0)
0

முட்டை குருமா

Jan-31-2019
Subha Shivaguru
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முட்டை குருமா செய்முறை பற்றி

Egg kuruma for side dish

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • பஞ்சாபி
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பெரிய வெங்காயம் ~2
  2. தக்காளி ~ 1
  3. மிளகாய் ~2
  4. முட்டை ~4
  5. இஞ்சி பூண்டு பேஸ்ட்~1 மேஜை கரண்டி
  6. மல்லி தூள் ~1 மேஜை கரண்டி
  7. மிளகாய் தூள்~1/2 மேஜை கரண்டி
  8. கரம் மசாலா தூள் ~1/2 மேஜை கரண்டி
  9. உப்பு ~தேவையான அளவு
  10. தாளிக்க
  11. பட்டை ~1 இன்ச்
  12. கிராம்பு ~3
  13. ஏலக்காய் ~2
  14. வறுத்து அரைக்க
  15. சோம்பு ~1/2 தேக்கரண்டி
  16. கசகசா~1 தேக்கரண்டி
  17. முந்திரி பருப்பு ~5
  18. தேங்காய் ~1/2 மூடி துருவியது
  19. கொத்தமல்லி தழை~ சிறிதளவு

வழிமுறைகள்

  1. வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்
  2. தக்காளியை துண்டுகளாக நறுக்கி மிளகாயை இரண்டாக கீறி கொள்ளவும்
  3. முட்டையை வேக வைத்து லேசாக மேலே கீறி கொள்ளவும்
  4. வறுத்து அரைக்க வேண்டியவற்றை வறுத்து மையாக அரைத்துக் கொள்ளவும்
  5. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்க்கவும்
  6. பின் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்
  7. பின் அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
  8. அதன் பின் தக்காளி மிளகாய் சேர்த்து நன்கு மசிய வதக்கவும்
  9. மல்லித்தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் சேர்க்கவும்
  10. பின் அதில் அதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது நீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்..
  11. குருமா கொதி வந்தவுடன் முட்டை சேர்த்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்