வீடு / சமையல் குறிப்பு / ஹெல்தி மீல்ஸ்

Photo of Healthy meals by Menaga Sathia at BetterButter
462
0
0.0(0)
0

ஹெல்தி மீல்ஸ்

Feb-01-2019
Menaga Sathia
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஹெல்தி மீல்ஸ் செய்முறை பற்றி

இந்த ஹெல்தி மீல்ஸில் நாட்டு கோழி சூப்,நாட்டுக்கோழி நெய் மிளகு வறுவல்,ரோமனஸ்கோ சாலட் செய்துள்ளேன்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ரோமனஸ்கோ சாலட் செய்ய:
  2. ரோமனஸ்கோ -1
  3. சாலட் டிரெஸ்ஸிங் செய்ய:
  4. ஆலிவ் எண்ணெய்-1/4 கப்
  5. வினிகர்-1 டேபிள்ஸ்பூன்
  6. எலுமிச்சைசாறு -1 டேபிள்ஸ்பூன்
  7. உப்பு-தேவைக்கு
  8. சின்னவெங்காயம் -2,பொடியாக நறுக்கியது
  9. பூண்டுப்பல் -2,பொடியாக நறுக்கியது
  10. ப்ரெஷ் மிளகுதூள் -1 டீஸ்பூன்
  11. நாட்டுக்கோழி சூப் செய்ய:
  12. நாட்டுக்கோழி எலும்புதுண்டுகள் -1/4 கிலோ
  13. உப்பு-தேவைக்கு
  14. சின்ன வெங்காயம் -15,பொடியாக நறுக்கியது
  15. தக்காளி -1,நறுக்கியது
  16. கறிவேப்பிலை-1ஈர்க்கு
  17. மல்லிதூள் -1 டீஸ்பூன்
  18. மஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன்
  19. மிளகு - 1 டீஸ்பூன்
  20. சீரகம்,சோம்பு -தலா 1 டீஸ்பூன்
  21. நெய் -2 டீஸ்பூன்
  22. நெய் நாட்டுக்கோழி மிளகு வறுவல் செய்ய
  23. காய்ந்த மிளகாய்-2
  24. சின்னவெங்காயம் -15,அரிந்தது
  25. தக்காளி -1,அரிந்தது
  26. நாட்டுகோழி -1/2 கிலோ
  27. உப்பு -தேவைக்கு
  28. நெய் -2 டேபிள்ஸ்பூன்
  29. மஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன்
  30. மிளகாய்தூள் -1 டேபிள்ஸ்பூன்
  31. ப்ரெஷ் மிளகுதூள் -1 டேபிள் ஸ்பூன்
  32. சோம்பு -1 டீஸ்பூன்
  33. கறிவேப்பிலை-1 ஈர்க்கு
  34. இஞ்சி பூண்டு விழுது -2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. சாலட் செய்ய: ரோமனஸ்கோ பூவினை தனிதனி பூவாக எடுத்து உப்பு கலந்த வெந்நீரில் 10 நிமிடம் போட்டு எடுக்கவும்.
  2. டிரெஸ்ஸிங் செய்ய கொடுத்தள்ள பொருட்களை ஒன்றாக கலந்து கொள்ளவும்.
  3. ஒரு பவுலில் பூ மற்றும் டிரெஸ்ஸிங் கலந்து வைக்கவும்.
  4. சூப் செய்ய : ப்ரெஷர் குக்கரில் நெய் ஊற்றி வெங்காயம்,கறிவேப்பிலை, தக்காளி என ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
  5. பின் எலும்புதுண்டுகள்,உப்பு,மல்லிதூள்,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி 3 நீர் ஊற்றி 5 விசில் வரை வேகவைக்கவும்
  6. வெந்ததும் மிளகு,சீரகம்,சோம்பு இவற்றை கரகரப்பாக பொடித்து சேர்த்து 1 கொதி வந்ததும் இறக்கவும்.
  7. வறுவல் செய்ய: குக்கரில் சுத்தம் செய்த கோழி,1டீஸ்பூன் மிளகாய்தூள்,இஞ்சி பூண்டு விழுது ,தேவையான நீர் ஊற்றி 5 விசில் வரை வேகவைக்கவும்.
  8. கடாயில் நெய் ஊற்றி சோம்பு,கறிவேப்பிலை,காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
  9. பின் வெங்காயம்,தக்காளி என ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதங்கியதும் மீதமுள்ள மிளகாய்தூள்,மஞ்சள் தூள் சேர்க்கவும்.
  10. பின் உப்பு,கறி வேகவைத்த நீரோடு சேர்த்து நன்கு சுருள கிளறவும்.
  11. கடைசியாக் மிளகுதூள் தூவி கிளறி இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்