வீடு / சமையல் குறிப்பு / உடைத்த சம்பா கோதுமை கிச்சடி

Photo of Broken wheat samba kichadi by Mohamed Zeaudeen at BetterButter
749
1
0.0(0)
0

உடைத்த சம்பா கோதுமை கிச்சடி

Feb-04-2019
Mohamed Zeaudeen
45 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

உடைத்த சம்பா கோதுமை கிச்சடி செய்முறை பற்றி

எல்லா நோய்களுக்கும் சிறந்த உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தேவையான பொருட்கள்
  2. உடைத்த சம்பா கோதுமை ஒரு கப்
  3. எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்
  4. நெய் 2 தேக்கரண்டி
  5. கேரட் 1 நறுக்கியது
  6. பீன்ஸ் சிறிதளவு நறுக்கியது
  7. பச்சைபட்டாணி ஊற வைத்தது சிறிது
  8. இஞ்சி சிறிதாக நறுக்கியது சிறிதளவு
  9. பச்சைமிளகாய்-2
  10. மஞ்சள் தூள் சிறிதளவு
  11. முந்திரிப்பருப்பு தேவைக்கேற்ப
  12. கடலைபருப்பு தேவைக்கேற்ப
  13. வெங்காயம் 2 நறுக்கியது
  14. கடுகு மற்றும் கறிவேப்பிலை சிறிதளவு
  15. தக்காளி ஒன்று நறுக்கியது
  16. தண்ணீர் தேவைக்கேற்ப
  17. உப்பு தேவைக்கேற்ப
  18. மல்லி இலை அலங்கரிக்க

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் நெய் மற்றும் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கோதுமை ரவையை நன்கு வறுக்கவும்
  2. மற்றொரு கடாயில் நெய் மற்றும் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை மற்றும் கடலைப்பருப்பு மற்றும் முந்திரி பருப்பு மற்றும் பச்சை மிளகாய் அனைத்தையும் போட்டு நன்கு வதக்க வேண்டும்
  3. அது நன்கு பொன்னிறமாக வதங்கியவுடன் வெங்காயம் மற்றும் தக்காளி இஞ்சி அனைத்தையும் போட்டு நன்கு வேக வைக்கவும்
  4. அனைத்தும் வதங்கி பொன்னிறமாக வந்தவுடன் காய்கறிகள் அனைத்தையும் தட்டி நன்கு கிளறி விடவும்
  5. கிளறி விட்ட பின்பு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
  6. அங்கு காய்கறி வெந்த பின்பு கோதுமை ரவை தட்டி கைவிடாமல் அளவுக்கு அடிபிடிக்காது அளவிற்கு நன்கு கிண்ட வேண்டும்.
  7. இந்த கோதுமை ரவை சீக்கிரம் வெந்து விடும் ஆகையால் கவனமாக இருக்கவும்
  8. கீழே இறக்கி மல்லி இலை தூவி பரிமாறவும்.
  9. இதற்கு ஏதேனும் தொட்டுக்கொள்ள விருப்பப்படுபவர்கள் வெங்காய சம்பல் அல்லது தேங்காய் சட்னி அரைத்து தொட்டு சாப்பிடவும் மிக அருமையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்