வீடு / சமையல் குறிப்பு / நட்ஸ் சிக்கி

Photo of Nuts chikki by sudha rani at BetterButter
453
0
0.0(0)
0

நட்ஸ் சிக்கி

Feb-05-2019
sudha rani
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

நட்ஸ் சிக்கி செய்முறை பற்றி

இது என்னுடைய 200 வது ரெசிப்பி அதை உங்கள் உடன் சேர்ந்து கொண்டாடும் வகையில் வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. முந்திரி 100 கிராம்
  2. பாதாம் 100 கிராம்
  3. பிஸ்தா 100 கிராம்
  4. வேர்கடலை 100 கிராம்
  5. வால்நட் 50 கிராம்
  6. சாரப்பருப்பு 50 கிராம்
  7. சர்க்கரை 1/2 கிலோ
  8. ஏலத்தூள் 1 ஸ்பூன்
  9. வெனிலா எசென்ஸ் 2 சொட்டு

வழிமுறைகள்

  1. முந்திரி பாதாம் பிஸ்தா சாரப்பருப்பு வால்நட் வேர்கடலை ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து ஆறவிடவும்
  2. பின் ஒரு பாலிதீன் கவரில் போட்டு இடிக்கும் குழவியால் கரகரப்பாக பொடிக்கவும்
  3. இதை ஒரு முறை நன்கு ஜலிக்கவும்
  4. ஜலிப்பதனால் இடிக்கும் போது வரும் மாவு நீக்கி கரகரப்பாக உடைத்த துண்டுகளை மற்றும் எடுத்து வைக்கவும்
  5. இந்த தூள் மாவை தனியாக எடுத்து வைக்கவும்
  6. அடுப்பில் வாணலியை வைத்து சர்க்கரை சேர்த்து கிளறி விடவும்
  7. சர்க்கரை சிறிது சிறிதாக வறுபட ஆரம்பிக்கும்
  8. (மிகவும் மெல்லிய தீயில் வைத்து நிதானமாக கிளறவும் இல்லை என்றால் தீய்ந்த வாடை வீசும் மிகவும் கவனமாக செய்யவும்)
  9. சர்க்கரை மெது மெதுவாக உருக ஆரம்பிக்கும்
  10. இந்த பதம் வந்ததும் மிகவும் கவனமாக தொடர்ந்து கிளறவும்
  11. சிறிது நேரத்தில் சர்க்கரை முழுவதும் கரைந்து வரும்
  12. சர்க்கரை முழுவதும் கரைந்து தேன் மாதிரி வரும் போது கரகரப்பாக உடைத்து ஜலித்து வைத்த நட்ஸ் துண்டுகளை சேர்த்து தொடர்ந்து கிளறவும்
  13. ஏலத்தூள் மற்றும் வெனிலா எசென்ஸ் சேர்த்து தொடர்ந்து கிளறி நன்கு சுருண்டு வரும் போது இறக்கவும்
  14. நெய் தடவி ரெடியாக உள்ள ட்ரேயில் உடனடியாக கொட்டி சமப்படுத்தி விடவும்
  15. ஒரு 2 நிமிடங்கள் வரை ஆறவிட்டு துண்டுகள் போட்டு தொடர்ந்து ஆறவிடவும்
  16. பின் மீண்டும் ஒரு 1/2 மணி நேரம் கழித்து ட்ரேயில் இருந்து எடுத்து உடைத்து வைக்கவும்
  17. மிகவும் கரகரப்பாக ருசியாகவும் இருக்கும்
  18. இத செய்யும் போது சர்க்கரையில் சிறிதும் தண்ணீர் சேர்க்காமல் செய்தால் கரகரப்பாக இருக்கும்
  19. (இவ்வாறு சர்க்கரையை நேரடியாக உருக்கி செய்வதால் மிகவும் கொதிநிலை அதிக அளவில் இருக்கும்)
  20. (அதனால் முதல் முறையாக முயற்சி செய்பவர்கள் கவனம் தவறாமல் செய்யவும்)

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்