வீடு / சமையல் குறிப்பு / கவுனி அரிசி அல்வா

Photo of Black rice alva by sudha rani at BetterButter
458
0
0.0(0)
0

கவுனி அரிசி அல்வா

Feb-09-2019
sudha rani
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

கவுனி அரிசி அல்வா செய்முறை பற்றி

சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான ஒரு இனிப்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. கவுனி அரிசி 1/2 கப்
  2. பால் 3 கப்
  3. வெல்லம் 2 கப்
  4. நெய் 6 டேபிள்ஸ்பூன்
  5. ஏலத்தூள் 1 ஸ்பூன்
  6. சுக்கு தூள் 1/2 ஸ்பூன்
  7. ஜாதிக்காய் பொடி 1/2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கவுனி அரிசியை இரண்டு முறை அலசி பின் அரைமணி நேரம் வரை ஊறவிடவும்
  2. பின் நீரை நன்கு வடிகட்டி விட்டு ஒரு சுத்தமான துணியில் பரப்பி ஸ்பேன் ஓட விட்டு நன்கு உலரவிடவும்
  3. பின் அரிசியை சிறிது சிறிதாக மிக்ஸியில் போட்டு ரவை பதத்தில் உடைக்கவும்
  4. உடைத்த அரிசியை ஒரு முறை நன்கு ஜலிக்கவும்
  5. ஜலிக்கும் போது மாவு நீங்கி ரவை அரிசி தனியாக கிடைக்கும்
  6. பின் அந்த அரிசியை 2 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு நன்கு வதக்கவும்
  7. பின் பால் சேர்த்து நன்கு குழைய வேகவிடவும்
  8. பால் போத வில்லை என்றால் இன்னும் சிறிது பால் சேர்த்து கொள்ளவும்
  9. முழுக்க முழுக்க பாலிலே வேகவைத்தால் மிகவும் நன்றாக இருக்கும்
  10. பின் வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி பின் மீண்டும் கொதிக்க விட்டு கெட்டியான பாகு எடுக்கவும்
  11. பின் வெந்த அரிசி உடன் வெல்ல பாகு சேர்த்து நன்கு கலந்து கொதிக்கவிடவும்
  12. நன்கு சேர்ந்து வரும் போது சூடான நெய் விட்டு தொடர்ந்து கிளறவும்
  13. ஏலத்தூள் சுக்கு தூள் ஜாதிக்காய் பொடி சேர்த்து நன்கு கலந்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்