வீடு / சமையல் குறிப்பு / மட்டன் குழம்பு

Photo of Mutton grevi by sudha rani at BetterButter
361
0
0.0(0)
0

மட்டன் குழம்பு

Feb-09-2019
sudha rani
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
70 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மட்டன் குழம்பு செய்முறை பற்றி

எந்த விதமான மசாலா தூள் வகைகளும் சேர்க்காமல் ஆரோக்கியமான கிராமத்து முறை குழம்பு கிராமத்திற்கு போனா கறி குழம்பு கொதிக்கறது மணக்கும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மட்டன் 1 கிலோ
  2. வெங்காயம் 1
  3. தக்காளி 2
  4. இஞ்சி 1 துண்டு
  5. பூண்டு 10 பல்
  6. கறிவேப்பிலை சிறிது
  7. கொத்தமல்லி தழை சிறிது
  8. உப்பு தேவையான அளவு
  9. எண்ணெய் 4 டேபிள்ஸ்பூன்
  10. கடுகு 1 ஸ்பூன்
  11. மசாலா அரைக்க 1:
  12. மல்லி விதை 2 கை
  13. சீரகம் 4 டேபிள்ஸ்பூன்
  14. மிளகு 2 ஸ்பூன்
  15. சோம்பு 2 ஸ்பூன்
  16. பட்டை 2
  17. கிராம்பு 2
  18. மராத்தி மொக்கு 2
  19. வரமிளகாய் 15
  20. மசாலா அரைக்க 2:
  21. சின்ன வெங்காயம் 1 கப்
  22. தேங்காய் துருவல் 1/2 கப்
  23. பொட்டுக்கடலை 2 ஸ்பூன்
  24. கறிவேப்பிலை சிறிது
  25. எண்ணெய் 6 டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. மசாலா அரைக்க 1 ல் கொடுத்துள்ள பொருட்களை தனித்தனியாக வறுத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு நைசாக சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும்
  2. மசாலா அரைக்க 2 ல் கொடுத்துள்ள பொருட்களை எண்ணெய் விட்டு சூடானதும் கறிவேப்பிலை சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும் பின் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும் பின் ஆறியதும் பொட்டுக்கடலை சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்
  3. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு கறிவேப்பிலை இடித்த பூண்டு மற்றும் இஞ்சி சேர்த்து வதக்கவும்
  4. பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  5. பின் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்
  6. பின் நறுக்கிய மட்டன் சேர்த்து நன்கு வதக்கி தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து ஒரு 10 நிமிடங்கள் வரை மூடி வைக்கவும்
  7. பின் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  8. பின் தொடர்ந்து கிளறி விட்டு அரைத்த மசாலா மல்லி சீரகம் விழுது சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்
  9. கறி நன்கு வெந்ததும் அரைத்த சின்ன வெங்காய விழுது சேர்த்து நன்கு கலந்து கொதிக்கவிடவும்
  10. நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்