வீடு / சமையல் குறிப்பு / குதிரை வாலி வெஜ்டபிள் பனியாரம்

Photo of Barnyard vegetable paniyaram by sudha rani at BetterButter
739
0
0.0(0)
0

குதிரை வாலி வெஜ்டபிள் பனியாரம்

Feb-15-2019
sudha rani
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

குதிரை வாலி வெஜ்டபிள் பனியாரம் செய்முறை பற்றி

சிறுதானிய உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. குதிரை வாலி அரிசி 2 கப்
  2. உளுந்து 1/2 கப்
  3. இட்லி அரிசி 1 கப்
  4. வெந்தயம் 2 ஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. பனியாரம் தாளிக்க:
  7. வெங்காயம் 3
  8. கேரட் 1
  9. பீன்ஸ் 6
  10. இஞ்சி 1 துண்டு
  11. பூண்டு 15 பல்
  12. கடுகு 1 ஸ்பூன்
  13. கறிவேப்பிலை சிறிது
  14. கொத்தமல்லி தழை சிறிது
  15. வரமிளகாய் 5
  16. எண்ணெய் 6 டேபிள்ஸ்பூன்
  17. கடலைப்பருப்பு 2 ஸ்பூன்
  18. உளுத்தம்பருப்பு 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. இட்லி அரிசி, குதிரை வாலி அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும்
  2. பின் அதை கிரைண்டரில் போட்டு அரைத்து உப்பு சேர்த்து கலந்து மூன்று மணி நேரம் வரை புளிக்க வைக்கவும்
  3. வெங்காயம்,காய்கறிகள்,மற்றும் இஞ்சி, பூண்டு,கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை ஆகியவற்றை பொடியாக நறுக்கவும்
  4. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு வரமிளகாய் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவும்
  5. பின் நறுக்கிய இஞ்சி பூண்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  6. பின் நறுக்கிய காய்கறிகள் சேர்த்து வதக்கவும்
  7. பின் நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
  8. மெல்லிய தீயில் வைத்து நிதானமாக வதக்கவும்
  9. நன்கு பச்சை வாசனை போக வதங்கியதும் மாவுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்
  10. மாவுடன் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  11. பின் அடுப்பில் நான்ஸ்டிக் பனியாற கல் வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்
  12. எண்ணெய் சூடானதும் மாவை ஊற்றி நிதானமாக வேகவிடவும்
  13. பின் மெதுவாக திருப்பி விட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டு வேகவிடவும்
  14. நன்கு பொன்னிறமாக வெந்ததும் எடுத்து விடவும்
  15. சுவையான ஆரோக்கியமான பனியாரம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்