வீடு / சமையல் குறிப்பு / பனிவரகு பனியாரம்

Photo of Proso Millet paniyaram by sudha rani at BetterButter
1131
0
0.0(0)
0

பனிவரகு பனியாரம்

Feb-15-2019
sudha rani
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பனிவரகு பனியாரம் செய்முறை பற்றி

எளிதான சிறுதானிய உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. இட்லி அரிசி 1 கப்
  2. பனிவரகு அரிசி 2 கப்
  3. உளுந்து 1/2 கப்
  4. வெந்தயம் 2 ஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. தாளிக்க:
  7. எண்ணெய் 6 டேபிள்ஸ்பூன்
  8. கடுகு 1 ஸ்பூன்
  9. வெங்காயம் 4
  10. கறிவேப்பிலை சிறிது
  11. கொத்தமல்லி தழை சிறிது
  12. வரமிளகாய் 4

வழிமுறைகள்

  1. அரிசி உளுந்து வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும்
  2. பின் அதை கிரைண்டரில் போட்டு நன்கு நைசாக அரைத்து எடுத்து உப்பு சேர்த்து கலந்து மூன்று மணி நேரம் வரை புளிக்க வைக்கவும்
  3. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு கறிவேப்பிலை வரமிளகாய் தாளிக்கவும்
  4. பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  5. வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் மாவுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்
  6. பின் பனியாரக்கல்லில் எண்ணெய் விட்டு சூடானதும் மாவை ஊற்றி நிதானமாக வேகவிடவும்
  7. மெதுவாக திருப்பி விட்டுநன்கு பொன்னிறமாக வந்ததும் எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்