வீடு / சமையல் குறிப்பு / ஓட்ஸ் ஹரிஸ்

Photo of Oats Harris by Benazer Abdul Kader at BetterButter
16
1
0.0(0)
0

ஓட்ஸ் ஹரிஸ்

Feb-27-2019
Benazer Abdul Kader
300 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ஓட்ஸ் ஹரிஸ் செய்முறை பற்றி

பருப்பு வகைகளை கொண்டு செய்யப்படும் இது புரதச் சத்து மிகுந்தது மேலும் ஓட்ஸ் சேர்வதால் இது டயட்டில் இருப்பவர்களுக்கு உகந்ததுp

செய்முறை டாக்ஸ்

 • நான் வெஜ்
 • மீடியம்
 • பண்டிகை காலம்
 • ஹைதராபாத்
 • ப்லெண்டிங்
 • பாய்ளிங்
 • ஸாட்டிங்
 • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

 1. வெள்ளை பயறு அரை கப்
 2. பாசிப்பருப்பு அரை கப்
 3. கடலைப்பருப்பு அரை கப்
 4. மசூர் தால் அரை கப்
 5. ஓட்ஸ் ஒன்றரை கப்
 6. நெய் ஒரு தேக்கரண்டி
 7. வெங்காயம்-2
 8. இஞ்சி பூண்டு விழுது இரண்டு மேசைக்கரண்டி
 9. எலும்பில்லாத கோழி அரை கிலோ
 10. கெட்டித் தயிர் ஒரு கப்
 11. தண்ணீர் 2 கப்
 12. நீளமாக நறுக்கிய இஞ்சி துண்டுகள் ஒரு மேஜைக்கரண்டி
 13. மல்லி இலை அலங்கரிக்க
 14. எலுமிச்சைச்சாறு பாதி
 15. சாட் மசாலா ஒரு தேக்கரண்டி
 16. ஹரிஸ் மசாலா செய்ய:
 17. ஏலக்காய் 7 அல்லது 8
 18. ஸ்டார் அனிஸ் 2
 19. நல்ல மிளகு விதை 10
 20. பட்டை 3 துண்டுகள்
 21. கிராம்பு3_5
 22. சீரகம் அரை மேஜைக்கரண்டி
 23. பெருஞ்சீரகம் அரை மேஜைக்கரண்டி
 24. கருவாயிலை 2
 25. மிளகாய்த்தூள் 2 மேஜைக்கரண்டி
 26. மஞ்சள் தூள் ஒன்றரை தேக்கரண்டி
 27. ஜாதிக்காய் பொடி கால் தேக்கரண்டி
 28. உப்பு அரை மேசைக்கரண்டி

வழிமுறைகள்

 1. நான்கு பயறு வகைகளையும் இரவில் ஊற வைக்கவும் தண்ணீரில்
 2. ஊறவைத்த பயறு வகைகளை 45 நிமிடங்கள் உப்பு போட்டு கொதிக்க விடவும்
 3. பயறுகள் வெந்ததும் அதனுடன் ஓட்ஸை சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
 4. ஹரிஷ் மசாலா செய்ய வேண்டிய பொருள்களை ஒன்றாக கலந்து பொடித்து வைக்கவும்
 5. கூடவே மசாலா தூள்களை சேர்த்து கலந்து வைக்கவும்
 6. ஹரிஸ் மசாலா ரெடி
 7. மற்றொரு பாத்திரத்தில் நெய் விட்டு வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்
 8. பின்னர் அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
 9. பின்னர் அதனுடன் எலும்பில்லா கோழிகளை சேர்த்து நன்கு வதக்கவும்
 10. பின்னர் தயார் செய்த ஹரிஷ் மசாலா 3 மேஜைக்கரண்டி சிக்கனுடன் சேர்க்கவும்
 11. பின்னர் அதனுடன் கெட்டித் தயிர் சேர்த்து இரண்டு மூன்று நிமிடங்கள் மிதமான தீயில் வேக விடவும்
 12. பின்னர் அதனுடன் 2 கப் தண்ணீர் சேர்த்து 10 நிமிடங்கள் மூடி வைத்து வேக விடவும்
 13. இப்போது அவித்து வைத்த பயறு வகை மட்டும் ஓட்ஸை இதனுடன் கலந்து நன்கு மசித்துக் கொள்ளவும்
 14. தேவைப்பட்டால் பிளெண்டர் உபயோகித்து செய்யவும்
 15. இறுதியாக நீளமாக வெட்டிய இஞ்சித் துண்டுகள் மல்லி இலையை எலுமிச்சைச் சாறு மற்றும் சாட் மசாலா சேர்த்து பரிமாறவும்
 16. சுவையான மற்றும் சத்தான ஹரிஷ் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்