வீடு / சமையல் குறிப்பு / மாதுளை ஸ்குவாஷ்

Photo of Pomegranate squash by sudha rani at BetterButter
502
0
0.0(0)
0

மாதுளை ஸ்குவாஷ்

Feb-27-2019
sudha rani
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

மாதுளை ஸ்குவாஷ் செய்முறை பற்றி

வரும் வெயில் காலங்களை சமாளிக்க ஆரோக்கியமான வீட்டிலேயே செய்து கொள்ளும் வகையில் ஏற்ற ஸ்குவாஷ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. மாதுளை சாறு 1 கப்
  2. சர்க்கரை 2 கப்
  3. தண்ணீர் 1 கப்
  4. சிட்ரிக் ஆசிட் 1 ஸ்பூன்
  5. ப்ரூட் எசென்ஸ் 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. மாதுளையின் முத்துகளில் சிறிதும் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து சாறு எடுத்து வைக்கவும்
  2. சர்க்கரை உடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  3. சர்க்கரை கரைந்து 10 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்
  4. பின் மாதுளை சாறு சேர்த்து சிறிது கொதிக்க விடவும்
  5. பின் அடுப்பை அணைத்து அந்த சூட்டிலே சிட்ரிக் ஆசிட் சேர்த்து தொடர்ந்து கிளறவும்
  6. பின் நன்கு ஆறவிடவும்
  7. நன்கு ஆறியதும் ஒரு முறை வடிகட்டி விட்டு அதில் எசென்ஸ் கலந்து கொண்டு ஏர்டைட் கன்ட்டெய்னில் மாற்றி பிரிட்ஜில் வைத்து கொள்ளவும்
  8. பரிமாறும் போது முக்கால் பாகம் ஸ்குவாஷ் மற்றும் கால் பங்கு தண்ணீர் சேர்த்து கலந்து கொண்டு பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்