BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / மோர் குழம்பு

Photo of More grevi by sudha rani at BetterButter
98
0
0(0)
0

மோர் குழம்பு

Feb-28-2019
sudha rani
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மோர் குழம்பு செய்முறை பற்றி

வெயிலுக்கு இதமான கிரேவி

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • సైడ్ డిషెస్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தயிர் 2 கப்
  2. துவரம் பருப்பு 2 ஸ்பூன்
  3. கடலைப்பருப்பு 2 ஸ்பூன்
  4. பச்சை மிளகாய் 1
  5. பெருங்காயத்தூள் 1/4 ஸ்பூன்
  6. தேங்காய் துருவல் 2 ஸ்பூன்
  7. கறிவேப்பிலை சிறிது
  8. இஞ்சி 1 துண்டு
  9. கடுகு 1 ஸ்பூன்
  10. தேங்காய் எண்ணெய் 6 ஸ்பூன்
  11. வரமிளகாய் 5
  12. உப்பு தேவையான அளவு
  13. மஞ்சள் தூள் 1/2ஸ்பூன்
  14. உடைத்த உளுந்தம் பருப்பு 2 ஸ்பூன்
  15. வெங்காயம் 4

வழிமுறைகள்

  1. கடலைப்பருப்பு மற்றும் துவரம் பருப்பை மணம் வர சிவக்க வறுத்து ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும்
  2. பின் ஊறிய பருப்புடன் தேங்காய் துருவல் இஞ்சி பச்சைமிளகாய் கறிவேப்பிலை சிறிது சேர்த்து அரைத்து எடுக்கவும்
  3. தயிரை கட்டியில்லாமல் நன்கு அடித்து கலந்து வைக்கவும்
  4. வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்து வெடிக்க விடவும்
  5. பின் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்
  6. பின் கறிவேப்பிலை வரமிளகாய் பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
  7. பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  8. பின் அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்
  9. பின் சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்
  10. பின் கடைந்த தயிர் ஊற்றி உப்பு சேர்த்து கலந்து கொதிக்க விடவும்
  11. தயிர் ஊற்றிய பின் நன்கு கொதிக்க விட வேண்டாம் நுரைத்து வரும் போது இறக்கி விடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்