Photo of Horse Gram Vada by Deepa Srivatsan at BetterButter
330
0
0.0(0)
0

கொள்ளு வடை

Feb-28-2019
Deepa Srivatsan
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கொள்ளு வடை செய்முறை பற்றி

கொள்ளு உடம்பிற்கு மிகவும் நல்லது உடல் எடையை குறைக்கும் மற்றும் கால்களுக்கு மிகவும் வலுசேர்க்கும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கொள்ளு 200 கிராம்
  2. வெங்காயம் 2
  3. பச்சை மிளகாய் 2
  4. கொத்தமல்லி சிறிதளவு
  5. உப்பு தேவையான அளவு
  6. பெருங்காயம் கால் டீஸ்பூன்
  7. அரிசி மாவு அரை ஸ்பூன்
  8. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. கொள்ளை முதல் நாள் இரவே தண்ணீரில் 8 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்
  2. ஊறவைத்த கொள்ளை குக்கரில் 4 விசில் வைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்
  3. அதன் பின் மிக்ஸியில் தண்ணீரை நன்றாக வடித்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்
  4. வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடிப்பொடியாக நறுக்கி ,அரிசி மாவு,உப்பு , பெருங்காயம் சேர்த்து அரைத்து வைத்த மாவுடன் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்
  5. கொத்தமல்லியை பொடிப் பொடியாக நறுக்கி அதனுடன் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்
  6. வாணலியில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் சிறு சிறு வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு நன்றாக வெந்ததும் எடுக்க வேண்டும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்