வீடு / சமையல் குறிப்பு / சிறுதானிய டோரேமான் கேக்

Photo of MILLET doraemon cake by Waheetha Azarudeen at BetterButter
441
0
0.0(0)
0

சிறுதானிய டோரேமான் கேக்

Feb-28-2019
Waheetha Azarudeen
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சிறுதானிய டோரேமான் கேக் செய்முறை பற்றி

சர்க்கரை மைதா மற்றும் கோதுமை இல்லாத சிறு தானியங்களை கொண்ட டோரேமான் கேக்

செய்முறை டாக்ஸ்

  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • பான் பிரை
  • விஸ்கிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கேழ்வரகு ஒரு கப்
  2. சிகப்பரிசி ஒரு கப்
  3. வெள்ளைச் சோளம் ஒரு கப்
  4. குதிரைவாலி தினை ஒரு கப்
  5. கொள்ளு ஒரு கப்
  6. பச்சைப்பயறு ஒரு கப்
  7. கம்பு ஒரு கப்
  8. பார்லி ஒரு கப்
  9. மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் அரைத்த சிறுதானிய மாவு ஒரு கப்
  10. பேக்கிங் பவுடர் அரை ஸ்பூன்
  11. பேக்கிங் சோடா கால் ஸ்பூன்
  12. முட்டை இரண்டு
  13. இனிப்பு சாக்லேட் பவுடர் 1/4 கப்
  14. வாசமில்லா எண்ணெய் 3 ஸ்பூன்
  15. வெண்ணிலா எசன்ஸ் ஒரு ஸ்பூன்
  16. நாட்டுச் சர்க்கரை அரை கப்
  17. விப் க்ரீம் கால் கப்

வழிமுறைகள்

  1. ராகி, வெள்ளை சோளம், குதிரை வாலி, கம்பு, சிகப்பு அரிசி, கொள்ளு, பச்சை பயறு , பார்லி அரிசி இவை அனைத்தும் 5 முதல் 8 நிமிடம் சிறு தீயில் வறுத்த மில்லில் அரைத்து கொள்ளவும்
  2. இரண்டும் முட்டையில் நாட்டுச் சர்க்கரை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்
  3. பின்பு அதில் சிறுதானிய கலவை மாவு ,பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சலித்து சேர்க்கவும். பின்பு அதில் வெண்ணிலா எஸ்ஸேன்ஸ், எண்ணெய் ஊற்றி நன்கு அடித்து கொள்ளவும். பின்பு நான் ஸ்டிக் தவாவை சிறு தீயில் வைத்து ஒரு கரண்டி வீதம் மாவை எடுத்து ஊற்றவும் . மாவை பரப்ப கூடாது ..
  4. பின்பு மறு புறம் திருப்பு போட்டு வேக வைத்து கொள்ள வேண்டும். பின்பு அதை சூடு தணியும் வரை வைக்கவும்
  5. பின்பு விப் க்ரீம் மில்க் சாக்லேட் பவுடரை சேர்த்து நன்கு எலக்ட்ரிக் பீட்டர் யில் அடித்துக் கொள்ளவும்
  6. கெட்டியான பதம் வரும் வரை அடித்து கொள்ளவும்
  7. பின்பு ஒரு கேக்கின் மேலே சாக்லெட் க்ரீம் தடவவும்
  8. பின்பு இன்னொரு கேக்கை மேலே வைத்து மூடவும்
  9. சுவையான சத்தான சிறுதானிய டோரேமான் கேக் தயார் குழந்தைகளுடன் கொண்டாடவும்
  10. செய்து மகிழவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்