வீடு / சமையல் குறிப்பு / ஐவகை இலை ரசம்

Photo of 5 leaf green rasam by Kalai Rajesh at BetterButter
567
0
0.0(0)
0

ஐவகை இலை ரசம்

Feb-28-2019
Kalai Rajesh
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

ஐவகை இலை ரசம் செய்முறை பற்றி

இரும்மல் , சளி இவற்றிற்கு ஏற்ற உணவு இது ,

செய்முறை டாக்ஸ்

  • ஃபிரையிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. ஓம இலை - 2
  2. துளசி இலை - ஒரு மேசைக்கரண்டி
  3. முசுமுசுக்கை இலை - 2/3 கப்
  4. தூதுவாளை இலை - 1/3 கப்
  5. வாதுரங்காச்சி இலை - 3/4 கப்
  6. தேங்காய் எண்ணெய் - 11/2 மேசைக்கரண்டி
  7. சீரகம் - 1 தேக்கரண்டி
  8. மிளகு - 1 தேக்கரண்டி
  9. வரமிளகாய் - 1
  10. புளி- மிக சிறிய அளவு
  11. தாளிக்க தேவையான பொருட்கள்
  12. கடுகு
  13. கறிவேப்பிலை
  14. எண்ணெய்

வழிமுறைகள்

  1. முதலில் இலைகளை எல்லாம் கழுவி தண்ணீர் வடிய தனியே வைக்கவும்
  2. ஒரு வட சட்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்
  3. தண்ணீர் வடிந்த இலைகளை தேங்காய் எண்ணெயில் பச்சை வாசம் போகும் வரை நன்கு வதக்கவும்
  4. இலைகளின் பச்சை நிறம் மாறாமல் வதக்கவும்
  5. பூண்டு , மல்லி , சீரகம் , மிளகு, வரமிளகாய் புளி இவற்றை அனைத்தையும் லேசாக தண்ணீர் தெளித்து அரைக்கவும்
  6. இது நன்கு அரைபட்ட பிறகு வதக்கி வைத்துள்ள இலைகளை சேர்த்து அரைக்கவும்
  7. அரைத்த கலவையை வேறொரு பாத்திரத்திற்கு மாற்றவும்
  8. தேவையான அளவு உப்பு தண்ணீர் சேர்த்து ருசி பார்க்கவும். எனக்கு 1 லி 50 மி தண்ணீர் தேவைப்பட்டது
  9. வட சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை தாளித்து கரைத்து வைத்துள்ள இலைச் சாற்றை ஊற்றி சூடேற்றவும்.
  10. ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை குறைந்த தீயில் வைத்து 5 அ 8 நிமிடங்கள் கொதிகவிடவும்
  11. இப்போது சூடான சுவையான ரசம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்