வீடு / சமையல் குறிப்பு / ரவாகேசரி , உளுந்து வடை

Photo of Rava kesari, ulundu vadai by Ilavarasi Vetri Venthan at BetterButter
1035
0
0.0(0)
0

ரவாகேசரி , உளுந்து வடை

Mar-03-2019
Ilavarasi Vetri Venthan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ரவாகேசரி , உளுந்து வடை செய்முறை பற்றி

South indian snacks

செய்முறை டாக்ஸ்

  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ரவை - 1 கப்
  2. சர்க்கரை - 2 கப்
  3. தண்ணீர் -21/2 கப்
  4. நெய் - 5 ஸ்பூன்
  5. முந்திரிபருப்பு - 6-9
  6. கிஸ்மிஸ் -4-6
  7. ஏலம் - 2
  8. கேசரி பவுடர் - 2 சிட்டிகை
  9. உளுந்து வடை
  10. உளுந்து - 1 கப்
  11. சின்னவெங்காயம்- 50 கிராம்
  12. பச்சை மிளகாய் - 2
  13. இஞ்சி - சிறுதுண்டு
  14. கருவேப்பிலை, மல்லிதழை- சிறிதளவு
  15. உப்பு - தேவையான அளவு
  16. எண்ணெய் - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் ரவையை முதலில் சிவக்க வறுத்து கொள்ளவும்.
  2. பின் ஒரு வாணலியில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
  3. கொதித்ததும் கேசரி பவுடர் சேர்க்கவும்.
  4. பின் அதில் ரவையை சிறிது சிறிதாக சேர்த்து கட்டி விழாமல் 1 ஸ்பூன் நெய் சேர்த்து கிளறவும்.
  5. தண்ணீர் நன்கு வற்றியதும் சர்க்கரை சேர்க்கவும்.
  6. நன்கு ஒருசேர கிளறவும்.
  7. வேறொரு வாணலியில் நெய் ஊற்றி காய்ந்த்தும் முந்திரி, கிஸ்மிஸ் , ஏலம் வறுத்து கேசரியில் சேர்க்கவும்.
  8. உளுந்து வடை
  9. உளுந்தை 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து தண்ணீரை வடித்து வைக்கவும்.
  10. பின் உளுந்து, இஞ்சி பச்சைமிளகாய் சேர்த்து அரைக்கவும்.
  11. தண்ணீர் அதிகம் சேர்க்காமல் உப்பு சேர்த்து நன்கு வழுவழுப்பாக அரைக்கவும்.
  12. அரைத்த மாவில் நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை, மல்லிதழை சேர்த்து கொள்ளவும்
  13. வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி நெல்லிக்காய் அளவு மாவு எடுத்து கையில் வைத்து தட்டி நடுவில் ஓட்டை போட்டு எண்ணெயில் போட்டு இருபுறமும் நன்கு சிவக்கவும் எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்