வீடு / சமையல் குறிப்பு / பானேகக்கன்/நார்வேஜியன் பேன்கேக்

Photo of Pannekaken/Norwegian Pancakes by Priya Suresh at BetterButter
396
0
0.0(0)
0

பானேகக்கன்/நார்வேஜியன் பேன்கேக்

Mar-18-2019
Priya Suresh
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பானேகக்கன்/நார்வேஜியன் பேன்கேக் செய்முறை பற்றி

நார்வே நாட்டில் சுலபமாக கிடைக்கக்கூடிய ரோட்டோர கடைகளில் வாங்கி சாப்பிடக் கூடிய திருக்கடை உணவு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • மற்றவர்கள்
  • ஐரோப்பிய
  • பான் பிரை
  • ப்லெண்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. 3 முட்டை
  2. 1 கப் மைதா மாவு
  3. 1+1/2 கப் பால்
  4. உப்பு தேவைக்கு
  5. வெண்ணை தேவைக்கு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து போட்டு நன்றாக அடித்துக் கொள்ளவும்
  2. நன்றாக அடித்த முட்டை உடன் பாலை சேர்த்து அடித்துக் கொள்ளவும்
  3. இந்த கலவையுடன் சிறிது சிறிதாக மாவை சேர்த்து மெல்லிய கலவையை தயார் செய்யவும்
  4. அரை மணி நேரம் இந்த கலவையை ஊற வைக்கவும்
  5. தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கவும்
  6. தோசை கல்லில் மாவை ஊற்றி தோசை கல்லை இடதுபுறம் இருந்து வலப்புறமாக சுழற்றவும்
  7. மாவுக் கலவை தோசைக்கல் முழுவதும் பரவுமாறு செய்யவும். சிறு தீயில் வைத்து வேக வைக்கவும்
  8. சிறிது வெண்ணெய் சேர்க்கவும்.
  9. ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  10. மிகவும் விரைவில் செய்யக்கூடிய நார்வேஜியன் பேன் கேக் தயார்.
  11. மீதமுள்ள மாவை இதைப்போல் செய்து சர்க்கரை அல்லது ஜாம் உடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்