வீடு / சமையல் குறிப்பு / மீன் கட்லெட்

Photo of Fish Cutlet by Navas Banu L at BetterButter
30
1
0.0(0)
0

மீன் கட்லெட்

Mar-27-2019
Navas Banu L
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

மீன் கட்லெட் செய்முறை பற்றி

" மீன் கட்லெட் " (Fish cutlet) தேவையான பொருட்கள் முள்ளில்லாத கட்டி மீன் - 1/2 கிலோ உருளைக்கிழங்கு - 2 சின்ன வெங்காயம் - 100 கிராம் பச்சை மிளகாய் - 5 ஜீரகத்தூள் - 1/2 ஸ்பூண் மிளகாய் தூள் - 1 ஸ்பூண் பெப்பர் தூள் - 1/2 ஸ்பூண் இஞ்சி பூண்டு விழுது - 1/4 ஸ்பூண் மல்லிஇலை - 1 கொத்து புதினா இலை - 1 கொத்து ப்ரெட் க்ரம்ப்ஸ் - தேவைக்கேற்ப முட்டை -4 எலுமிச்சை சாறு - 1/2 ஸ்பூண் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை : * மீன், உருளைக்கிழங்கு இரண்டையும் ஆவியில் வேக வைத்து மசித்துக் கொள்ளவும். * வாணலியில் சிறிது எண்ணெயை விட்டு வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு விழுது, மல்லிஇலை, புதினா இலை ஆகியவற்றை வதக்கி ஆவியில் வேக வைத்து மசித்த மீன் கலவையில் சேர்க்கவும். * அத்துடன் மிளகாய்த்தூள்,ஜீரகத்தூள், பெப்பர் தூள், எலுமிச்சைச் சாறு,உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்துக் கொள்ளவும். * முட்டையை ( வெள்ளைக்கரு மட்டும்) ஒரு வாயகன்ற பாத்திரத்தில் உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ளவும். * ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு நன்கு காய்ந்ததும் மீன் கலவையை சின்ன உருண்டைகளாக உருட்டி வட்ட வடிவில் தட்டி முட்டையில் தோய்த்து ப்ரெட் க்ரம்ப்ஸில் புரட்டி பொரித்தெடுக்கவும். சுவை மிகுந்த மீன் கட்லெட் ரெடி.

செய்முறை டாக்ஸ்

 • நான் வெஜ்
 • ஈஸி
 • சௌத்இந்தியன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

 1. முள்ளில்லாத கட்டி மீன் - 1/2 கிலோ
 2. உருளைக்கிழங்கு - 2
 3. சின்ன வெங்காயம் - 100 கிராம்
 4. பச்சை மிளகாய் - 5
 5. ஜீரகத் தூள் - 1/2 ஸ்பூண்
 6. மிளகாய்த் தூள் - 1 ஸ்பூண்
 7. பெப்பர் தூள் - 1/2 ஸ்பூண்
 8. இஞ்சி, பூண்டு விழுது - 1/4 டீஸ்பூண்
 9. மல்லி இலை - 1 கொத்து
 10. புதினா இலை - 1 கொத்து
 11. ப்ரெட் க்ரம்ப்ஸ் - தேவைக்கேற்ப
 12. முட்டை - 4
 13. எலுமிச்சைச் சாறு - 1/2 ஸ்பூண்
 14. உப்பு - தேவையான அளவு
 15. எண்ணெய் - தேவையான அளவு

வழிமுறைகள்

 1. மீன்,உருளைக்கிழங்கு இரண்டையும் ஆவியில் வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.
 2. வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, மல்லிஇலை,புதினா இலை ஆகியவற்றை வதக்கி, ஆவியில் வேக வைத்து மசித்த மீன் கலவையில் சேர்க்கவும்.
 3. அத்துடன் மிளகாய்த் தூள்,ஜீரகத்தூள், பெப்பர் தூள், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்துக் கொள்ளவும்.
 4. முட்டையை ( வெள்ளைக்கரு மட்டும்) ஒரு வாயகன்ற பாத்திரத்தில் உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ளவும்.
 5. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு நன்கு சூடானதும்,மீன் கலவையை சின்ன உருண்டைகளாக உருட்டி வட்ட வடிவில் தட்டி முட்டையில் தோய்த்து ப்ரெட் க்ரம்ப்ஸில் புரட்டி பொரித்தெடுக்கவும்.
 6. சுவை மிகுந்த மீன் கட்லெட் ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்